நான் படித்த PSBB பள்ளி “கிரிகெட் வீரர் அஸ்வின் வருத்தம்!

0
341
PSBB ASWIN

சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பாலா பவன் (PSBB) பள்ளியில் ஆசிரியர் ராஜ கோபாலன் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பள்ளியின் பல மாணவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கைது செய்யப்படுள்ளார்.
அந்த ஆசிரியர் தனது மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் முக்கியமான சமூக ஊடக உரையாடல்கள் , படங்களுடன் இன்ஸ்டாகிராமில் வந்ததை தொடர்ந்து, பல அரசியல்வாதிகள் களத்தில் இறங்கி, இந்த கொடூரமான சம்பவ ம் குறித்து தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். திமுக எம்.பி. கனிமொழி இந்த விவகாரம் குறித்து தனக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, குற்றவாளி ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற அனைத்து குற்றவாளிகள் மீதும் விரைவான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதை அடுத்து இந்தியாவின் கிரிக்கெட் வீரர் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை தெரிவித்தார். தான் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதால் மட்டுமல்ல, இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என்பதாலும் இந்த சம்பவத்தால் மிகுந்த கலக்கம் அடைந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

இந்த பாலியல் தொல்லை சம்பவம் பொது களத்தில் வந்த பின்னரே அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களில் மூலம் பள்ளி மாணவிகளை வேட்டையாடும் ஆசிரியரை அம்பலப்படுத்தியதாகக் கூறப்படும் பள்ளியின் பழைய மாணவருக்கு ஏராளமான மற்ற மாணவர்கள் தொடர்புகொண்டதாகவும் , அவர்களின் அதிர்ச்சியூட்டும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அஸ்வின் கூறுகையில் “இது சென்னையில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான பள்ளி. ஆசிரியர் ராஜகோபாலைப் பற்றி வெளிவரும் தகவல்களால் மிகவும் மனம் உடைக்கிறது, அங்கு படித்த நான் அந்த ஆசிரியரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை, நீதியும் சட்டமும் தன் கடமையை செய்யும் என்றாலும் தற்போதுள்ள சமூக அமைப்பில் முழுமையான மாற்றம் கொண்டு வரவேண்டிய நேரம் இது.” என்று கூறியுள்ளார்.
நம் வீட்டு பெண் பிள்ளைகள் இது போன்று தனக்கு ஏற்படும் மிகச்சிறிய நிகழ்வுகளை நம்மிடம் உடனடியாக பகிர்ந்துகொள்ள நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், 2 இளம் சிறுமிகளின் தந்தை எனும் முறையில் , கடந்த இரண்டு இரவுகள் மிகுந்த வேதனையாக இருந்தன என்றும், ராஜகோபாலன் என்பது இன்று வெளிவந்த ஒரு பெயர் தான் , ஆனால் எதிர்காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க, நாம் செயல்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.