தமிழகத்தில் ஏப்.20 முதல் இரவு ஊரடங்கு – ஞாயிறு முழு லாக்டவுன் அமல்!

0
348
lockdown

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு வரும் 20-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு. தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல். இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கு.
மேலும் பிளஸ் டூ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கின்போது பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை. கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைன் மூலம் மட்டும் நடத்தப்பட வேண்டும். அனைத்து நாட்களிலும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை.

அவசர மருத்துவ தேவை, விமானம், ரயில் நிலையங்களுக்கு செல்ல மட்டும் இரவு நேரத்தில் அனுமதி. அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேரத்தில் செயல்பட அனுமதி. பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கும் அனுமதி. பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அறிவிப்பு. இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்

அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் வினை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் (petrol, diesel & LPG, etc.) அனுமதிக்கப்படும். ஆகியவை முழு ஊரடங்கின் போது

  • முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது. மற்ற மின் வணிக (e-commerce) நிறுவனங்களின் வேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை.

• ஊடகம் மற்றும் பத்திரிகைத் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம். துறையினர் தொடர்ந்து

• தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (continuous process industries) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

• முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்குமிகாமல்) ஏற்கனவே நடத்துவதற்கும் அதில் வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.

• நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

• தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய (work from home) அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள். பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் (shopping malls),

அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) (Big format stores) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன், இரவு 9.00 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

• கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, கோயில் பணியாளர்கள், கோயில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

• கொரோனா தொற்றை சுருத்தில் கொண்டு, புதிதாக குடமுழுக்கு/திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

• +2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பன்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு (Practicals) மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.

அரசின் வழிகாட்டுதலை Pdf வடிவில் பெற்றுக்கொள்ள கீழே இருக்கும் Download பட்டனை அழுத்தவும்.