மகனின் இறப்புக்கு பிறகு இரட்டை பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்ட நடிகர் விவேக்!

0
784
twin

மகனின் இறப்புக்கு பிறகு இரட்டைகுழந்தைகளை பெற்றுக் கொண்ட நடிகர் விவேக்..!…

விவேக்கின் மனைவி அருட்செல்வி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மகள்களில் மூத்தவர் அமிர்த நந்தினி இரண்டாமவர் தேஜஸ்வினி. மூன்றாமவர் மறைந்த பிரசன்னகுமார். இவர் 2015ஆம் ஆண்டு சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தபோது 2015 அக்டோபர் மாதம் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் 40 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பிரசன்னகுமாரின் உடல்நிலை மோசமடைந்து அவர் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மரணமடைந்தார்.ஒற்றை மகனை இழந்து விட்டு விவேக்கும், அவரது குடும்பத்தினரும் கடும் வேதனையில் தவித்து வந்தனர். இதனையடுத்து தீவிரமாக சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் விவேக்.

இதையடுத்து விவேக் தனது மகன் நினைவாக சாய் பிரசன்னா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி மரங்களை நடும் பணியில் ஈடுபட்டு வந்தார். மகன் இழந்த துக்கம் தாங்காமல் தனக்கு ஒரு மகன் வேண்டும் என ஆசைப்பட்ட விவேக் ஜிஜி செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் மனைவிக்கு சிகிச்சை எடுத்தார். அதையடுத்து அவரின் மனைவி டெஸ்ட் டியூப் மூலம் கருவுற்றார். தனது மகனே மீண்டும் வந்து பிறப்பான் என விவேக் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. தற்போது அந்தக் குழந்தைகளுக்கு 4 வயது ஆகிறது.
அந்தக்குழந்தைகளுக்கு சிறு பிரச்னைகள் என்றாலும் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவம் பார்த்து வந்தார். அல்லது அந்த தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தைகள் சிறப்பு மருத்துவர் தீபா, விவேக் வீட்டிற்கே சென்று சிகிச்சையளித்துவிட்டுத் திரும்புகிறார்.

சினிமா மூலம் பலருக்கும் நல்ல கருத்துகளையு சொல்லி வந்த விவேக், ஆணும் பெண்ணும் சமம் என்று சமூக அக்கறையாய் பேசும் விவேக் தனது 55 வயதிம் ல் ஆண் வாரிசு வேண்டும் என்று குழந்தை பெற்றுகொள்வது தேவையா என்று பலர் விமர்சனம் செய்யக் கூடும் என்பதால் இதனை ஊடகங்களுக்கு மறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால் விவேக் பெண் பிள்ளைகளையும் மிகுந்த அன்போடு வளர்த்து வந்தார். தன் மகனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தனக்கு தன் மகன் மீண்டும் கிடைப்பான் என்ற நம்பிக்கையிலேயே மீண்டும் குழந்தை பெற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.