இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கும் தொழில் வாய்ப்பு

0
141
iocl

நாட்டின் மிக பெரிய பெட்ரோல் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் இந்தியா முழுவதும் தனது பெட்ரோல் நிலைய கிளைகளில் இருக்கும் திறந்தவெளி காலி இடங்களை வியாபார ரீதியாக பயன்படுத்த ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிடுள்ளது. இதன்படி காலி இடங்கள் அல்லது கூடுதல் கட்டமைப்பை அமைக்கும் வசதி பெற்ற தனது IOCL கிளைகளில் சாலையில் செல்லும் பயனிகளுக்கு பயன்படும் வகையிலானபாங் துரித உணவகங்கள், சிறு உணவகங்கள், வாகன பழுது பார்க்கும் நிலையம் (சர்வீஸ், டையர் பழுது, பஞ்சர்) போன்ற பல வியாபாரங்களை நடத்த தகுதியுள்ள நபர்களிடம் இருந்து தங்கள் திட்டங்கள் மற்றும் அனுபவங்களை எழுத்துப்பூர்வமாக பெற விரும்புகிறது.

மேற்கண்ட தொழில் அல்லாது வேறு வியாபாரங்களை செய்ய விரும்புகிறவர்களும் தங்கள் திட்டத்தை எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம்.

akabre@indianoil.in என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது தபால் மூலமாகவோ தங்கள் திட்ட விபரங்களை சமர்பிக்கலாம்.
உங்கள் தபாலை அனுப்ப வேண்டிய முகவரி.

Retail Sales Department
Indian Oil Corporation Ltd.
Indian Oil Bhavan,G9 Ali Yavar Jung Marg,
Bandra East, Mumbai 400051
உங்கள் விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 30.04.2021

இது சமந்தமான வேறு தகவல் உதவிகளுக்கு கீழ் கண்ட தொலைபேசி எண்களை அழைக்கலாம்.
Amit Kabre : 9769140661
Anand Govindarajan : 9152011324