முடி கொட்டுதல், முடி வளர்ச்சியின்மை, முடி அடர்த்தி இல்லாமை போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு

0
381

பலரின் மிகப் பெரிய பிரச்சனையே முடி கொட்டுதலாகத் தான் உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு தங்களின் முடியைக் கவனித்துக் கொள்ளவே நேரமில்லை. முடி கொட்டுதல், முடி வளர்ச்சியின்மை, முடி அடர்த்தி இல்லாமை போன்ற பிரச்சனைகள் உள்ளன. எத்தனையோ குறிப்புகள் விலையுயர்ந்த மருந்துகள் வாங்கி பயன்படுத்தியும் முடி வளர்ச்சி பெறவில்லை என்ற கவலை சிலருக்கு உள்ளது. உங்களுக்கான சிறந்த தீர்வாக வைட்டமின் ஈ மாத்திரைகள் உதவும்.வைட்டமின் ஈ மாத்திரைகள் உங்கள் முடியின் கட்டமைப்பை மாற்றி அமைக்க உதவும். இந்த மாத்திரைகள் உங்கள் முடியின் வளர்ச்சியை ஊக்குவித்து முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தி உங்கள் முடியைப் பளபளக்கச் செய்கிறது.

இந்த மாத்திரை வெறும் இரண்டு ரூபாய் தான். வைட்டமின் ஈ மாத்திரைகளுடன் மற்றும் சில பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் முடி உதிர்தலைத் தடுத்து அடர்த்தியாகச் செய்யலாம். வெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.பாதாம் எண்ணெய்வைட்டமின் ஈ, தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் இவை அனைத்தும் கலந்த கலவை முடியை ஆரோக்கியமாக மாற்றி உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைப்பதால் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.


தேவையான பொருட்கள்
2 வைட்டமின் ஈ மாத்திரைகள், ஒரு தேக்கரண்டியளவு பாதாம் எண்ணெய், ஒரு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய், ஒரு தேக்கரண்டியளவு ஆமணக்கு எண்ணெய் மற்றும் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் வைட்டமின் ஈ மாத்திரையிலிருந்து எண்ணெயை வெளியே எடுத்து பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றுடன் கலக்குங்கள். இந்த கலவையை முடி முழுவதும் தடவி ஒரு நாள் இரவு வரை விட்டுவிடுங்கள். அடுத்த நாள் காலையில் நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம்.

வெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.முட்டை
வைட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் முட்டை இவை இரண்டும் முடி உதிர்தலுக்கு எதிராகப் போராடுவதற்கும், முடியின் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.