உங்கள் வாகனத்தின் RC STATUS மற்றும் இன்சுரன்ஸ் காலாவதி தேதி ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?

0
504

உங்கள் வாகனத்தின் RC நிலைமை, பதிவு தேதி, இன்சுரன்ஸ் காலவதியாகும் நாள், வாகனத்தின் பெயர் மற்றும் உரிமையாளரின் பெயர் போன்ற எண்ணற்ற விபரங்களை PARIVAHAN என்ற அரசின் இணையதளத்தின் மூலம் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். முன்பெல்லாம் VAHAN SERVICE என்ற ஒரு மொபைல் எண்ணிற்கு நமது வாகனத்தின் பதிவு எண்ணை மெசேஜ் செய்தாலே போதும். நம் வாகனத்தின் ஜாதகம் நம் மொபைலில் குறுஞ்செய்தியாக வந்தடையும்.

அதனால் யார் வேண்டுமானாலும், சாலையில் செல்லும் எந்த ஒரு வாகனத்தின் எண்ணைக் கொண்டு, அந்த வாகனத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் ஊர், வாகனத்தின் மீது கடன் உள்ளதா ? என்ற நிலை, இன்சுரன்ஸ் உள்ளதா இல்லையா என்று கண்டறிய முடிந்தது. அதனால் இப்போது பாதுகாப்பு கருதி அந்த சேவை நிறுத்தப்பட்டது.

இப்போது கீழ் கண்ட வழிமுறையை பின்பற்றி ஆன்லைன் மூலம் இந்த சேவையை பெறலாம்.

1. முதலில் இந்த லிங்கை சொடுக்கி வாகன் சர்விஸ் இணையதளத்துக்கு செல்லுங்கள்.

create account

இங்கு Create account என்பதில் கிளிக் செய்து முதலில் இந்த இணையதளத்தில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

2.அதில் NEW USER REGISTRATION என்ற தலைப்பில் மொபைல் நம்பர் மற்றும் Email id-ஐ கொடுத்து GENERATE OTP என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.

fill the mobile number and email id and click “Generate Otp”

3.நீங்கள் GENERATE OTP-ல் கிளிக் செய்தவுடன் நீங்கள் உள்ளிட்ட மொபைல் நம்பர் மற்றும் ஈமெயிலுக்கு OTP(one time password) அனுப்பி வைக்கப்படும். அதை இங்கு உள்ளீடு செய்து verify என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


4.உங்கள் otp சரியானதாக இருக்கும் போது “OTP for citizen user has been verified” என்று கீழ் காணும் பக்கம் காண்பிக்கும் அதில் உங்கள் பெயரையும் , கடவுச்சொல் இருமுறையும் நிரப்பி SAVE என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.

fill your name and password twice and click save

password உருவாக்கும் பொழுது ஒரு பெரிய எழுத்து (capital letter) ஒரு அடையாளம்(symbol-@#$) , ஒரு நம்பர்(0-9) கலந்த கலவையாக உருவாக்க வேண்டும். SAVE செய்த பின் கேழ் காணும் செய்தி காண்பிக்கும்.

Thank you msg will be appear after your account creation

5.இப்போது உங்கள் கணக்கு வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இனி நீங்கள் உங்கள் வாகனத்தின் பதிவு என்னை உள்ளீடு செய்து அதன் தகவலை பார்க்கமுடியும். அதற்கு மீண்டும் VAHAN இணையதள முகப்பு பக்கத்திற்கு சென்று உங்கள் மொபைல் நம்பரை கொடுத்து NEXT என்பதில் கிளிக் செய்யுங்கள்.

Enter your mobile number and click NEXT
Enter your password and click Continue

6.மேலே காட்டப்பட்டதுபோல் உங்கள் கடவுசொல்லை உள்ளிட்டு continue பட்டணை கிளிக் செய்யுங்கள். login செய்தவுடன் உங்கள் திரையில் கீழ் கண்டவாறு தோன்றும்.

After your successful login you will see this page in your screen.

இதில் “Enter Vehicle number” என்னும் இடத்த்தில் உங்கள் வாகனத்தின் பதிவு எண்ணை உள்ளீடு செய்து, captcha verification code-ஐ சரியாக நிரப்பி, Vahan Search என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு உங்கள் வாகனத்தின் பெயர், மாடல், பதிவு செய்த நாள், காலவதியாகும் தேதி, இன்சுரன்ஸ் காலாவதியாகும் தேதி, உரிமையளரின் பெயர் அனைத்தும் காண்பிக்கும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக உரிமையாளர் பெயர் மட்டும் ஒரு எழுத்து மறைக்கப்பட்டு மறு எழுத்து காண்பிக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, உங்கள் பெயர் MURUGAN.M என்றால் *U*U*A*.* என்று காண்பிக்கும்.