வெயில் கொளுத்துதா?… இதெல்லாம் சாப்பிடுங்க எப்பேர்பட்ட வெயில்லயும் ஜில்லுனு ஆயிடுவீங்க

0
281

கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. இப்பவே வெயில் மண்டைய பிளக்க ஆரம்பித்து இருக்கும். நிறைய பேருக்கு வெளியிலே போய்ட்டு வெயில்ல இருந்து தப்பித்து வருவதற்குள் படாதபாடாகி விடும். வெயில் காலத்தில் அதிகமாக வியர்ப்பதால் நீர்ச்சத்து தேவைப்படுகிறது. எனவே மக்கள் கோடை காலங்களில் நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது உடம்பிற்கு நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆங்காங்கே தர்பூசணி போன்ற பழங்களும் விற்கப்படும்.

கோடை காலத்தில் தர்பூசணி மட்டுமல்ல நீங்கள் இன்னும் சில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது கோடை காலத்திற்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு நீர்ச்சத்தையும் நமக்கு வழங்குகிறது. அதே நேரத்தில் டப்பாக்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் மற்றும் ஜூஸ் கள் வேண்டாம். ஏனெனில் இவைகளில் அதிக சர்க்கரைகள் சேர்க்கப்டுகின்றன. எனவே இவற்றைத் தவிர்த்து முடிந்தால் வீட்டிலேயே ப்ரஷ்ஷான பழங்களைக் கொண்டு ஜூஸ்களை தயாரித்து குடியுங்கள். கோடைகாலத்தை குளு குளுவென ஆக்கக் கூடிய சில வகை உணவுகள் இதோ.

​தயிர்

கோடை காலத்தில் மக்கள் உணவில் அதிகளவில் தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது உடம்பிற்கு நல்ல குளிர்ச்சியை தரும். மேலும் இதில் புரதங்கள் அதிகளவில் உள்ளன. இவை தசை வளர்ச்சி மற்றும் பாதிக்கப்பட்ட தசைகளை சரி செய்கிறது. தயிர் ஒரு புரோபயாடிக் உணவு என்பதால் குடல் வாழ் பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்திற்கு உதவுகிறது. நீங்கள் தயிர், பட்டர் மில்க் பயன்படுத்தி கூட உங்க சூட்டை குறைத்துக் கொள்ளலாம்.

​தக்காளி

கோடைகால நோயி லிருந்து தப்பிக்க தக்காளி நமக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள விட்டமின் ஏ, சி, லைக்கோபீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் நமது நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது. மன அழுத்தம் மற்றும் உடம்பில ஏற்படும் அழற்சி வீக்கத்தை குறைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அதுமட்டுமல்லாமல் தக்காளி நமது சருமத்திற்கு இயற்கையான சன்ஸ்க்ரீன் மாதிரி செயல்படுகிறது. எனவே தக்காளியை உணவில் சேர்த்து கொண்டால் வெயிலில் இருந்து நமது சருமத்தை காக்க முடியும்.

​இளநீர்

இளநீர் ஒரு இயற்கையாகவே ஆற்றலை தரும் பானமாகும். கோடைகால வெயிலில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே இருக்கும் இளநீர் பானங்களை வாங்கி நீங்கள் குடித்து வரலாம். இதிலுள்ள இயற்கை சர்க்கரை, சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உடம்பிற்கு ஆற்றலையும் குளிர்ச்சியையும் தருகிறது. வயிற்றின் pH அளவை பராமரித்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. இதிலுள்ள சைட்டோகின் மற்றும் லாரிக் அமிலம் வெயிலால் ஏற்படும் சரும பாதிப்பை தடுத்து சீக்கிரம் சருமம் வயதாகுவதையும் தடுக்கிறது.

​தர்பூசணி

கோடைகாலத்திற்கு ஏற்ற உணவு என்றாலே முதலில் நியாபகத்திற்கு வருவது தர்பூசணி மட்டும் தான். இதிலுள்ள அதிகப்படியான தண்ணீர் சத்து கோடை கால தாகத்தை போக்குகிறது. அதிகமாக வியர்க்கும் போது நமது உடலில் உப்புச் சத்து குறைபாடு ஏற்படலாம். இதனால் ஏற்படும் சோடியம் மற்றும் பொட்டாசியம் எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை சரி ஆக்குகிறது. இதில் சர்க்கரை சத்து அதிகமாக இருந்தால் கூட குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் எல்லாரும் தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்.இதிலுள்ள எல்-சிட்ரூலைன் என்ற அமினோ அமிலம் உடற்பயிற்சியில் ஏற்படும் தசைகளின் வேதனையை குறைக்கிறது. உங்க உடல் சூட்டை குறைக்க ஆற்றலை தர இது சிறந்த ஒன்று.

​வெள்ளரிக்காய்

வெள்ளிரிக்காயில் கோடை தணிக்கும் நீர்ச்சத்து, நார்ச்சத்துகள், வைட்டமின் பி போன்றவை காணப்படுகிறது. எனவே மன அழுத்தம், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் வீக்கத்தை குறைக்கும். வயிறு சூட்டை தணித்து அசிட்டிட்டி பிரச்சினையை குறைக்கிறது.

புதினா இலை

புதினா இலையில் இரும்புச் சத்து இருப்பதால் நோயெதிப்பு சக்தியை அதிகரித்தல், அழற்சியை போக்குதல் போன்ற பயன்களை தருகிறது. மேலும் வயிற்று பிடிப்பு மற்றும் அசிட்டிட்டியை போக்குகிறது. புதினா இலை கோடை காலத்தில் உங்களுக்கு சிறந்த புத்துணர்ச்சியை தரும்.

​வெங்காயம், சப்ஜா

வெங்காயத்தில் இயற்கையாகவே உடம்பை குளிர்ச்சியாக்கும் பொருட்கள் உள்ளன. எனவே வெங்காயத்தை உணவில் சேர்ப்பது வெயிலுக்கு எதிரான பாதுகாப்பை தருகிறது. இதிலுள்ள குர்செடின் அழற்சி எதிர்ப்பு பண்புகளை தருகிறது. சாலட், கறி, ரைதா போன்றவற்றில் பயன்படுத்தி வரலாம்.

சப்ஜா விதைகள்

சப்ஜா விதைகள் உடம்பிற்கு குளிர்ச்சியை தரக் கூடியது. இதில் நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பது பசியை கட்டுப்படுத்தவும், உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

​மாம்பழம்

மாம்பழம் ஒரு சீசன் வகை உணவாகும். இது கோடை காலத்தில் வலம் வரும் முக்கியமான பழமும் கூட. இதில் இயற்கையாகவே கோடை காலத்தை சமாளிக்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதிலுள்ள விட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடன்கள் வெயில் காலத்தில் சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. பழுக்காத மாங்காயைக் கொண்டு சீரகம் மற்றும் உப்பு சேர்த்து ஜூஸ் தயாரித்து குடித்து வரலாம். இதிலுள்ள பெக்டின் கோடை காலத்தை எதிர்த்து போரிட உதவுகிறது.

​வாழைப்பழங்கள்

வாழைப்பழங்களில் உள்ள பொட்டாசியம், பி-வைட்டமின்கள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் வயிறு சூட்டை தணிக்கிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க, மூளை செயல்பாட்டை அதிகரிக்க மற்றும் கோடை காலத்தில் சரும பொலிவை கூட்ட உதவுகிறது. கோடை காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. நெஞ்செரிச்சலை சரி செய்து உணவு எளிதாக சீரணமாக, குடிபோதை தெளிய உதவுகிறது.https://a8e812e3d662f02d087b3372d85a2775.safeframe.googlesyndication.com/safeframe/1-0-37/html/container.html?n=0

பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்

கோடை காலத்தில் அதிகமாக வியர்வை வெளியேற்றம் இருப்பதால் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

மோர், தயிர் போன்றவற்றை பருகலாம். இது உடல் சூட்டை தணிக்கும்

வெளியில் செல்லும் போது இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். இது கூடக் கொஞ்சம் வியர்க்க வழி வகுக்கும். எனவே தளர்வான காற்றோட்டமான ஆடைகளை அணிந்து செல்லுங்கள்.

வெயில் அதிகமான நாட்களில் கலர் குடைகள், கூலிங்கிளாஸ் அணிந்து வெளியில் செல்லலாம். கறுப்பு ஆடைகள், குடைகள் வேண்டாம். இது வெயிலை கிரகித்து உங்களுக்கு கூடுதல் சூட்டை கொடுக்கும்.

கோடை காலத்தில் குளிர் பானங்கள், கார்பனேட்டேட்டடு பானங்கள் வேண்டாம்.

வியர்க்குரு, சரும அழற்சி போன்ற பிரச்சினைகளை தவிர்க்க உடம்பை குளித்து துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சினை இருக்கும். சரும மருத்துவர்களை நாடி வியர்க்குரு பவுடர்களை வாங்கி பயன்படுத்தி வரலாம்.

கோடை காலத்தில் இரண்டு முறை குளியுங்கள். இதை உங்களை ப்ரஷ்ஷாக உணர வைக்கும். எனவே மேற்கண்ட 10 உணவுகள் உங்களுக்கு கோடை காலத்தை குளிர்ச்சியாக மாற்ற சிறந்தது .