இன்றைய ராசிபலன் 23-02-2021

0
295

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஇந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் தடையில்லாத வெற்றி கிடைக்கும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்போருக்கு சுபச் செய்திகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

2.ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்த பின் முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த நெருக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

3.மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடன் இருப்பவர்கள் எந்த அளவிற்கு உங்களை மதிக்கிறார்கள் என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். ஒருசிலருக்கு தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் ஆதரவு உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் பெருகும்.

4.கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவக் கூடிய சூழ்நிலை இருக்கும். இதுவரை நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாக கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன ரீதியான விஷயங்களை மூன்றாம் நபர்களை நம்பி செயல்படாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

5.சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி கிடைக்கக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சுயமாக முடிவெடுக்கக் கூடிய சூழ்நிலை உண்டாகும் . பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

6.கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவை எடுத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் படிப்படியாக உயரும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாரா பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

7.துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கப்பெறாமல் தவிப்பீர்கள். நண்பர்களுடைய ஆதரவு பக்கபலமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. இரக்க சுபாவம் கொண்ட உங்களுக்கு என்றோ செய்த உதவிக்கு பலனாக நல்ல விஷயங்கள் நடைபெறும்.

8.விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை நோக்கி பயணிக்கும் வகையில் அமையும். உஷ்ணம் தொடர்பான உடல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன அமைதி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

9.தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்க கீழே பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும்.

10. மகரம் 

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நடைபெறுவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். எந்த ஒரு விமர்சனத்தையும் தாங்கிக்கொள்ளும் மனோதிடம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழி சுமப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டியாளர்களின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புகள் உண்டு.

11.கும்பம் 

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் மற்றும் பொறுமை அவசியமாகும். ஏதாவது ஒரு வார்த்தையை விட்டு விட்டால் அதை திரும்ப மீட்டெடுப்பதற்கு சிரமப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு அதிகரித்து டென்ஷனுடன் காணப்படுகிறார்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

12.மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் விடாமுயற்சிகள் பலனளிக்கும் வகையில் அமையும். உங்களுக்கு துன்பத்தை கொடுப்பவர்கள் இடம்கூட இரக்கம் காட்டும் குணமுள்ள நீங்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன அமைதி கிடைக்கும்.