இன்றைய ராசிபலன் 22-02-2021

0
246

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஇந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க போராட வேண்டியிருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

2.ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது வரை நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். போட்டி பொறாமைகள் குறைந்து உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள்.y

3.மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் கால தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் பொறுமையை கையாளுவது நலமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் முன்னேற்றத்தில் பாதகம் இருக்காது. சக நண்பர்களிடம் அனுசரணையாக நடந்து கொண்டால் வெற்றி காணலாம்.

4.கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் மற்றும் பொறுமை அவசியம் ஆகும். படபடவென்று பேசி வார்த்தைகளை கொட்டி விடாமல் யோசித்துப் பேசுவது நல்லது. பெண்கள் இன்றைய நாள் சமயோஜிதமாக செயல்பட்டால் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு உண்டாகும்.

5.சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தாராள தன வரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

6.கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. சுபகாரிய முயற்சிகள் ஒரு முறைக்கு பல முறை யோசித்து பின் செயலாற்றுவது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும்.

7.துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் அற்புத நாளாக அமையும். கடன் தொகைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான பலன்களைக் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

8.விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதுவும் செய்து விடாமல் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக பொறுமையுடன் இருப்பது அவசியமாகும். தேவையற்ற வாக்குவாதங்களை ஈடுபட்டால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

9.தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களை காணலாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை மேலோங்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் குறைவதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

10. மகரம் 

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய விடாமுயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது. நீண்டநாள் தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைத்தாலும் முன்னேற்றத்தில் தடை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

11.கும்பம் 

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. உங்களுடைய முன்கோபத்தால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்கலாம். கூடுமானவரை பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சமுதாயத்தில் இருக்கும் மதிப்பு உயரும். சுப காரியங்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

12.மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு காரியமும் தடைகளைத் தாண்டி வெற்றி அடையும் இனிய நாளாக இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய உத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்.