வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை

0
213
தமிழகத்தில் படிப்பை முடித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்கள் பலர் இருக்கின்றனர். சிலர் அரசு தேர்வுகளுக்கு முயற்சி செய்துகொண்டும் வருகின்றனர். இந்நிலையில் படித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக உதவித் தொகையை கொடுக்க அரசு முன்வந்திருக்கிறது. இதன்படி இந்த உதவி தொகையை பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் அதேபோல 12ம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாயும் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வயது வரம்பு , கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப படிவம் போன்ற முழு விபரங்களுக்கு கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கவும்.
For detailed instructions and application form Click Here.   Download Pdf