தமிழ்மடல்-காவலர் தேர்வு மாதிரி வினா விடை – 1

0
499
01) இலக்கண குறிப்பு தருக “எந்தை”
அ)வினைமுற்று 
ஆ)மரூஉச்சொல் 
இ)பெயரெச்சம் 
ஈ )வினையெச்சம் 
02) “மராமத்து இலாக்கா” என்பதன் தமிழ் வடிவம்
 
அ)சுகாதார துறை 
ஆ)பொதுபணித்துறை 
இ)நீதித்துறை 
ஈ) காவல் துறை 
3) முதன் முதலில் தமிழ் எனும் சொல் பயன்படுத்தப்பட்ட முதல் இலக்கியம் எது?
அ) சிலப்பதிகாரம்
ஆ) இனியவை நாற்பது
இ) மணிமேகலை
ஈ) தொல்காப்பியம்
4) பாரதிதாசன் பெண்களுக்கு இணையாக கூறும் பறவை எது?
அ) மயில்
ஆ)அன்னம்
இ) குயில்
ஈ) கிளி
5) “கண்ணியமிகு” என்னும் சொல்லை அடைமொழியாக கொண்டவர் யார்?
அ) நவாப் கான்
ஆ) காயிதே மில்லத்
இ) அபுல் காசிம்
ஈ) காக ரோஷனி
6) பாரதிதாசன், “மறம் பாடவந்த மறவன்” என்று யாரை அழைத்தார்?
அ) திருவள்ளுவர்
ஆ) கம்பர்
இ) பாரதியார்
ஈ) இளங்கோவடிகள்
7) ‘பஞ்சமகா சப்தம்’ என்று அழைக்கப்படும் இசைக்கருவி எது?
அ) மிருதங்கம்
ஆ) வீணை
இ) நாதஸ்வரம்
ஈ) குடமுழா
8)”வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்று பாடிய கவிஞர் யார்?
அ) அவ்வையார்
ஆ) இடைக்காடர்
இ) திருமூலர்
ஈ) இராமலிங்கனார்
9) புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் என்ன?
அ) ரங்கராஜன்
ஆ) நாகராஜன்
இ) தங்கராஜன்
ஈ) ராஜராஜன்
10)”உலகத்திலேயே ஒரு மொழிக்காக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே மாநாட்டுகுரிய முதல் மொழியும் தமிழே” என்று முழங்கியவர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) திரு.வி.க
இ)மு. வரதராசனார்
ஈ) க. அப்பாத்துரையார்
(விடைகள்:
1)மரூஉச் சொல்
2) பொதுப்பணித்துறை
3) தொல்காப்பியம்
4) மயில்
5) காயிதே மில்லத்
6) பாரதியார்
7) குடமுழா
8) அவ்வையார்
9) ரங்கராஜன்
10)க. அப்பாத்துரையார்)