ஓசோன் படல ஓட்டை என்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

0
385
      நாம், ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்பதை பாடத்திலும், பல்வேறான செய்திகளாகவும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி கேள்விப்படும் பொழுது நாம், ஓசோன் படலம் என்பது பூமியை சுற்றி விரிக்கப்பட்டுள்ள ஏதோ விரிப்பு எனவும், அதில் ஏதோ கிழிசல் ஏற்பட்டு இருக்கிறது என்றும் நாம் கற்பனை செய்து இருப்போம். 
உண்மையில் ஓசோன் படலம் என்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? 
       ஓசோன் என்பது ஆக்சிஜனை விட அடர்த்தியான ஒரு வாயு. ஆக்சிஜனின் மூலக்கூறு வாய்ப்பாடு O2.ஓசோனின் மூலக்கூறு வாய்பாடு O3. ஓசோன் வாயு தன் வழியே ஒளியைச் எளிதாக ஊடுருவ இயலாத அளவிற்கு மிகவும் அடர்த்தியானது. இந்த வாயு வளிமண்டலத்திற்கு மேலாக குறிப்பிட்ட அளவு தூரத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு அடுக்கு போல பரவி காணப்படுகிறது.இதைத்தான் நாம் ஓசோன் படலம் என்கிறோம். 
       இந்த ஓசோன் படலத்தினால் சூரிய ஒளி எளிதில் ஊடுருவ முடியாமல், திக்கி திணறி முடிவில் குறைந்த அளவே பூமியை வந்தடைகிறது. இந்த ஓசோன் படலத்தால் சூரியனில் உள்ள புற ஊதாக் கதிர்கள் தடுத்து நிறுத்தப் படுகின்றன. இந்த ஓசோன் படலம் இயற்கை நமக்கு கொடுத்த ஒரு அரணாகும். ஏனெனில் சூரியனிடமிருந்து வரக்கூடிய புற ஊதாக்கதிர்கள் ஓசோன் படலத்தால் தடுத்து நிறுத்த படாமல் இருந்தால் மனிதர்கள் மீது பட்டு, தோல் புற்றுநோயை உருவாக்கும் அளவிற்கு ஆபத்தானது. 
         இப்படி இருக்கையில் கடந்த பல ஆண்டுகளாக உலகம் சந்தித்து வரும் அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக இந்த ஓசோன் படலம் சிதைவடைந்து வருகின்றது. அதாவது பிளாஸ்டிக்கை எரிக்கும் பொழுது வெளிவரக்கூடிய வாயுக்கள் இந்த ஓசோன் படலத்தை அடையும்பொழுது, ஓசோன் படலத்தை வெப்பமடையச் செய்கின்றன. இதனால் இந்த ஓசோன் படலம் தளர்வடைந்து சூரிய ஒளியை வடி கட்டாமலேயே பூமிக்கு அனுப்பி விடுகிறது. இதனால் தற்போதைய நாட்களில் தோல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
     அதனால் பிளாஸ்டிக், ஏசி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கும் பொருள்களை புறக்கணிக்க வேண்டும். இயற்கையோடு இயற்கையாக நாம் வாழும் பட்சத்தில் ஆரோக்கியமான வாழ்வினை பெறலாம். 
      இந்த கட்டுரையின் மூலம் ஓசோன் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு படலம் என்பதையும், அதில் ஓட்டை என்பது கிழிசல் இல்லை எனவும் அது ஓசோனின் அடர்த்தி மிக மிக குறைந்து தளர்வடைவது தான் என்பதையும் அறியலாம்.