உஷாரய்யா உஷாரு – 05

0
442
       கண்ணன் பல ஆண்டுகளாக கேரளாவில் தொழில் செய்து வந்தான். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை ஊருக்கு வந்து செல்வான். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வந்திருந்த பொழுது, அவனது அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் இட தகராறு காரணமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. 
       சிறிய விவாதமாக தொடங்கிய அந்த சண்டை, சிறிதுநேரத்தில் பூதாகரமாக வெடித்தது. கண்ணனின் அப்பாவும் அவனுக்கு சித்தப்பாவும் கட்டிப்புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். 
      கண்ணன் வேகமாய் அருகினில் செல்வதற்குள் கண்ணனின் அப்பா அவனது சித்தப்பாவை பிடித்து தள்ள, படிக்கல்லின் மீது விழுந்து அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார் அவனது சித்தப்பா. 
        தன் தந்தையை காவல்நிலையத்திற்கு அனுப்ப மனமில்லாத கண்ணன் , சித்தப்பாவை தான் தள்ளிவிட்டு கொன்றதாக ஒப்புக்கொண்டு காவல் நிலையம் சென்றான். எந்தப் பாவமும் செய்யாமல் தண்டனை அனுபவித்தான் கண்ணன். 
         சில நேரங்களில் நம் குடும்பத்திலும், நம்மை சுற்றியும் சில நேரங்களில் சண்டை ஏற்படலாம். சண்டையில் ஏதாவது ஒரு வகையில் நமக்கு இழப்பு நேரிடும் என்பதை நாம் கட்டாயமாக உணர்ந்து சண்டையின் ஆரம்ப நிலையிலேயே அந்த இடத்தைவிட்டு நம் குடும்பத்தவர்களை அப்புறப்படுத்துவது நன்மை அளிக்கும். இல்லையென்றால் மருத்துவமனை, காவல்நிலையம், கோர்ட் என்று அலைய வேண்டிய சூழல் ஏற்படும்.