உஷாரய்யா உஷாரு -01

0
378
         முத்து ஒரு கூலி தொழிலாளி. அவன் சொந்தமாக ஒரு பைக் வைத்திருந்தான். அந்த பைக்கிற்கு ஒருநாளும் இன்சூரன்ஸ் செய்ததில்லை. இன்சூரன்ஸ் போடுவது பற்றி நண்பர்களும் உறவினர்களும் கூறியபோதும் இன்சூரன்ஸ் போடாமல் அலட்சியம் காட்டி வந்தான். 
         இந்நிலையில் ஒருநாள் முத்து, வேலைக்கு தனது பைக்கில் செல்லும் பொழுது எதிரே வந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எதிரே வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்து மீது வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில், விபத்தில் இறந்து போன நபரின் குடும்பத்திற்கு, முத்து 10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. 
         இதைக்கேட்ட முத்து, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், இது தன் தகுதிக்கு மீறிய தொகை என்றும் கூறி நீதிமன்றத்தில் அழத்தொடங்கினான். அந்த நேரத்தில் நீதிபதி முத்துவைப் பார்த்து, “நீ உன் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்து உள்ளாயா..?” என்று கேட்டார். அதற்கு “இல்லை” என்று பதிலளித்தான் முத்து . 
        உடனே அந்த நீதிபதி “நீ வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் இன்சூரன்ஸ் போட்டிருந்தால் இந்த 10 லட்சம் ரூபாயையும் இன்சூரன்ஸ் கம்பெனி வழங்கியிருக்கும். நீ இன்சூரன்ஸ் செய்யாததால் இந்த பணத்தை நீ தான் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அப்பொழுதுதான் இன்சுரன்ஸ் போடுவதின் நன்மையை அறிந்தான் முத்து. தன் உறவினர்களும் நண்பர்களும் இன்சுரன்ஸ் போட சொல்லும் பொழுது அலட்சியம் காட்டியதை நினைத்து கவலை கொண்டான். தன் வீட்டையும், நிலத்தையும் விற்று, வட்டிக்கு கடன் வாங்கி அந்த பத்து லட்சத்தை செலுத்தினான் முத்து. 
        நண்பர்களே.. இன்றைய நெருக்கமான சூழ்நிலையில் எந்நேரம் எதுவாயினும் நடக்கலாம் என்ற நிலையில் நாம் இருக்கிறோம். ஒரு இக்கட்டான சூழலில் நமக்கு கைகொடுக்கும் இன்ஷூரன்ஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லை என்றால் முத்துவின் நிலை தான் நமக்கும்.