உஷாரய்யா உஷாரு – 3

0
480
            குமார், சாலையில் கொஞ்ச தூரத்திற்கு முன்பாக செங்கல் ஏற்றிய டிராக்டர் ஒன்று செல்வதை பார்த்தபடியே சென்றுகொண்டிருந்தான். அப்பொழுது அந்த டிராக்டரில் இருந்து செங்கல் ஒன்று தவறி கீழே விழுந்தது. நடுரோட்டில் செங்கல் கிடப்பதை பார்த்த குமாருக்கு மனதில் அச்செங்கலை அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும், அவசரமாக வேலைக்கு சென்று கொண்டிருக்கும் காரணத்தினால், அந்த செங்கலை எடுக்காமல் சென்றுவிட்டான். 
  
           வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய குமார், சாலையில் அந்த செங்கல் கிடக்கிறதா என்று பார்த்தபடியே வந்தான். வீட்டிற்கு வந்தபொழுது தன் அப்பாவின் தலையில் கட்டு போட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியுற்றான். எப்படி நடந்தது..? என்று கேட்க சாலையில் செங்கல் ஒன்று இருப்பதை பாராமல் சைக்கிளில் செல்லும் பொழுது தவறி விழுந்ததாக அப்பா பதிலளித்தார். அப்பொழுதுதான் குமாருக்கு நாம் அந்த செங்கலை அப்புறப்படுத்தி இருந்தால் அப்பாவிற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது என்று கவலை கொண்டான். 
        நண்பர்களே இச்சம்பவம் போலவே, நாமும் சில நேரங்களில் நல்லதை உடனே செய்ய தயக்கமுற்று அதனால் பல இழப்புகளை சந்திக்கின்றோம் என்பதே நிதர்சனமான உண்மை. ஆகையால் நல்லது செய்ய ஒரு கணம் கூட யோசிக்க வேண்டாம்.