திகிலூட்டும் பேய் கதைகள் – 03 – வாடகை வீடு

0
1317
    பாஸ்கரும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தவர்கள். சொந்த ஊருக்கு திரும்பிய அவர்கள், ஒரு வீடு ஒன்றினை வாங்கலாம் என்று நினைத்திருந்தார்கள். 
அதன் பொருட்டு நகரில் இருக்கும் பிரதான தெருவில் உள்ள ஒரு வீட்டினை பார்க்க தயாரானார்கள். இரவு டின்னர் முடித்துவிட்டு காரில் செல்லும் பொழுது, வீடு இருப்பதாக சொன்ன புரோக்கரை அலைபேசியில் அழைத்தான் பாஸ்கர். 
அலைபேசியின் மறுமுனையில் பேசிய ப்ரோக்கர், “நீங்கள் அந்தப் பிரதான தெருவிற்கு செல்லுங்கள். நான் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்” என கூறினான். 
அந்தத் தெருவிற்கு வந்த பாஸ்கர் தம்பதியினர், ப்ரோக்கர் சொன்ன அடையாளத்துடன் ஒரு வீட்டினை கண்டனர். அப்பொழுது அந்த வீட்டின் முன் பகுதியில் உள்ள தோட்டத்தில் அமர்ந்து இருந்த ஒருவன், பாஸ்கர் தம்பதியினரை கைகாட்டி உள்ளே அழைத்தான். இருவரும் உள்ளே சென்றதும், அவன் தன்னை வீட்டு ஓனர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். 
சிறிய உரையாடலுக்குப் பின் தம்பதியினரை வீட்டை சுற்றிக் காண்பிப்பதற்காக உள்ளே அழைத்துச் சென்றான். வீட்டை சுற்றிப் பார்த்த தம்பதியினருக்கு வீட்டின் அழகும், நேர்த்தியான அமைப்பும் பிடித்துப் போனது. 
அந்த நேரத்தில் பாஸ்கரின் மனைவி, கிச்சனை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அருகில் இருந்த பீங்கான் தானாக கீழே விழுந்து உடைந்து போனது. ஏறிட்டுப் பார்த்து திரும்பிய கணத்தில் ஹாலில் எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தியும் அணைந்து போனது. 
அடுக்கடுக்காய் ஏற்பட்ட அபசகுனங்களால் பாஸ்கரின் மனைவி, வீடு வேண்டாம்.. என பாஸ்கரிடம் சைகையால் வெளிபடுத்தினாள். 
அந்த நேரத்தில் பாஸ்கரின் அலைபேசி ஒலிக்க, பாஸ்கர் எடுத்துப் பேச தொடங்கினான். அலைபேசியின் மறுமுனையில், வீட்டு புரோக்கர் பாஸ்கரிடம், தான் பிரதான தெருவிற்கு வந்து விட்டதாக கூற, பாஸ்கர் தான் வீட்டினை சுற்றி பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினான். 
இதைக் கேட்டதும் வீட்டு புரோக்கர், தான் தங்களுக்கு காட்ட இருந்த வீடு அது இல்லை எனவும், நீங்கள் தற்போது நின்று பார்த்துக் கொண்டிருக்கும் வீடு, பல பேரின் உயிர்களை பயங்கரமான முறையில் காவு வாங்கிய மர்ம வீடு எனவும், அந்த வீட்டிலிருந்து உடனே வெளியேறுமாறும் கத்த தொடங்கினான். 
ஆனால் புரோக்கர் சொன்னதைத் எதையும் காதில் வாங்காமல் பாஸ்கர் போனை கட் செய்தான். அந்த நேரத்தில் அவனது கார் சாவி கீழே விழ, கார் சாவியை குனிந்து எடுக்கும் போது, அவன் கண்ட காட்சி ப்ரோக்கர் சொன்னது அத்தனையும் உண்மை என்பதை உறுதிப்படுத்தியது. அப்படி அவன் கண்ட காட்சி என்ன தெரியுமா…? 
அது என்னவென்றால் வீட்டு ஓனரின் தலை உடல்பகுதி முன்னோக்கி நின்று கொண்டிருக்க, அவனது கால் இரண்டும் பின்னோக்கி நின்று கொண்டிருந்ததை சாவியை எடுக்கும்பொழுது பாஸ்கர் கண்டான். 
நிலைமையை உணர்ந்த பாஸ்கர், அடுத்த நொடியில் அவனை ஓங்கி அருகிலிருந்த பால்கனி பகுதி பள்ளத்தில் தள்ளிவிட்டு, மனைவியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே ஓட தொடங்கினான். 
விழுந்த அவன் தனது கொடூர உருவத்திற்கு மாறி கீழே இருந்து மெதுவாக வெளிவிட தொடங்கினான். அதற்குள் பாஸ்கர் காரினை எடுத்துக் கொண்டு, அந்தப் பிரதான தெருவிலிருந்து மெயின் ரோட்டிற்கு மின்னல் வேகத்தில் பயணமானான். 
எல்லையை தாண்டி விட்டோம்; இனி பயமில்லை; தப்பித்தோம் என நிம்மதி கொண்ட பாஸ்கர், வேகமாக சென்று கொண்டிருந்த காரினை திடீரென நிறுத்தி விட்டான். காரணம் அவனது காருக்கு முன்பாக அந்தக் கொடூர உருவம் வந்து நின்றது. 
முடிந்தது