உஷாரய்யா உஷாரு-02

0
401
           மணிமாறன், பல வருடங்களாக தனியார் துறையில் வேலை பார்த்து வந்தான். அப்பா, அம்மா, மனைவி, மகள் என்ற குடும்பத்தை தன் ஒருவனின் கடின உழைப்பால் ஈடு கட்டி வந்தான். பல ஆண்டுகளாக அரசு துறையில் பணியில் ஈடுபடுவதற்கான சாத்தியத்தை எதிர்பார்த்து காத்திருந்தான் மணிமாறன். 
         அன்று ஒரு நாள் இரவு ஏழு மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பும் பொழுது அவனது அலைபேசியில் அவனுக்கு அரசு வேலை உறுதியாகி விட்டது என்ற செய்தி வந்தது. இச்செய்தியை பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மணிமாறன், தனது பைக்கை எடுத்துக் கொண்டு தன் குடும்பத்தின் கஷ்டத்தை இனி நீக்கி விடலாம் என்ற எண்ணத்தோடு வந்துகொண்டிருந்தான். அந்த நேரத்தில் எதிரே வந்த கார் ஒன்று லைட்டிணை டிம் செய்யாமல் வந்தது 
         மணிமாறனுக்கு அவ்வெளிச்சத்தினால் கண்கள் கூச நிலை தடுமாறி சாலையின் விளிம்பில் இருந்த குழிக்குள் வாகனத்தை விட்டு வாகனத்தோடு கீழே சாய்ந்தான் மணிமாறன். அந்த நேரத்தில் மணிமாறனுக்கு பின் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று மணிமாறனின் மீது ஏற மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனான். 
      இப்படி பல விபத்துகள், வாகனத்தின் லைட்டினை டிம் செய்யாமல் ஒவ்வொருநாளும் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றது. மணிமாறன் குடும்பம் போல் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் லைட்டினை டிம் செய்யாமல் செல்ல கூடியவரா..? இனி நீங்களும் உங்கள் வாகனத்தின் லைட்டினை சரியான நேரத்தில் டீம் செய்ய பழகிக் கொள்ளுங்கள். உங்களால் ஒரு உயிர் இழப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளலாம்.