நம் அனைவருக்குமே பல சினிமா பாடல்கள் முழு மனப்பாடமாக இருக்கும். ஆனால் பள்ளியில் படிக்கின்ற திருக்குறள், செய்யுள்கள் போன்றவை சினிமா பாடல்கள் அளவிற்கு நம் மனதில் நிற்பதில்லை.. காரணம் என்ன தெரியுமா..?
மூளையில் நம் நினைவுகளையும் பதிவுகளையும் சேகரிக்க மூன்று பகுதிகள் உள்ளன.
#முதல் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த விஷயங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
#இரண்டாம் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கான நினைவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்
#மூன்றாம் பகுதியில் நமது வாழ்நாளில் நடந்த முக்கியமான விஷயங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்
நினைவு தத்துவம் சொல்வது என்னவென்றால் முதல் நிலையில் இருக்கின்ற ஒரு நினைவானது மறுபடி ஒரு முறை நினைக்க பட்டு புதுப்பிக்கப்பட்டால் இரண்டாம் நிலைக்கு செல்லும். மீண்டும் ஒரு முறை நினைக்கப் பட்டால் அடுத்த நிலையான மூன்றாம் நிலைக்கு செல்லும்.
திங்கட்கிழமை, ஒரு மாணவன் ஒரு செய்யுளை படிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அது, முதல்நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அவன் மீண்டும் அந்த செய்யுளை வாசிக்கா விட்டால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அது மறந்து போய் விடும்.
அதே நேரத்தில் அந்த மாணவன் செவ்வாய்க்கிழமை அந்த செய்யுளை மீண்டும் ஒரு முறை வாசித்து விட்டால், அந்த செய்யுள் முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு சேமித்து வைக்கப்பட்டு அடுத்த ஒரு வாரத்திற்கு அந்த செய்யுளை அவன் மறக்க மாட்டான். அதனைத்தொடர்ந்து, அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஒருமுறை அந்த செய்யுளை வாசித்து விட்டால், அந்த செய்யுள் மூன்றாம் நிலையில் சேமிக்கப்பட்டு எப்பொழுதுமே அந்த மாணவன் அந்த செய்யுளை மறந்து போவதில்லை.
சினிமா பாடல்கள் நீண்ட நாள் நினைவில் இருக்க காரணம்:
திங்கட்கிழமை நாம் ஒரு சினிமா பாடலை கேட்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அன்று முழுவதும் அந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்போம். அடுத்த நாள், அதற்கு அடுத்தநாள், என்று மீண்டும் மீண்டும் அந்தப் பாடலை நாம் பாடிக்கொண்டே அந்தப்பாடலை நம் மூளையில் முதல் நிலையிலிருந்து 3-ம் நிலைக்கு சேமித்து வைத்து விடுகிறோம். இதனால்தான் சினிமா பாடல்கள் நம் நினைவில் நீண்டகாலம் நிற்கிறது.
ஆனால் நாம் படிக்கும் செய்யுள்கள், ஒருமுறை படித்த பின்பு மறுமுறை அதை நினைவுபடுத்துவதில்லை. அடுத்தடுத்து நினைவு படுத்துவதால் மட்டுமே செய்யுளோ சினிமா பாடலோ நம் மூளை நீண்ட காலத்திற்கு சேமித்து வைத்திருக்கும் என்பதே அறிவியல் உண்மையாகும்.