பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

0
266

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை சேகரித்து, நாளைக்குள் (ஜூன் 8) அனுப்பிவைக்கும் படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பணியிடம்:

கொரோனா பரவல் காரணமாக ஏறத்தாழ 2 ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. பள்ளி மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்க கூடாது என்ற நோக்கத்தில் அவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கே பெரும்பாலும் நடைபெற்று வருகிறது.

இது தவிர கடந்த கல்வியாண்டில் பயின்ற 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் இம்மாதம் முதல் துவங்க உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அதற்கான விவரங்களை சேகரித்து பட்டியலிட்டு நாளைக்குள் (ஜூன் 8) பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.