நெல்லிக்காய் பச்சடி செய்வது எப்படி?

0
162

தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் – 6,
தயிர் – ஒரு கப்,
தேங்காய்த் துருவல் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – ஒன்று,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  • நெல்லிக்காயை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய நெல்லிக்காயுடன் இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதனுடன் அரைத்த நெல்லிக்காய் விழுது, கறிவேப்பிலை போட்டு நன்றாக கலக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து நெல்லிக்காய் பச்சடியில் சேர்க்கவும்.
  • சுவையான சத்தான நெல்லிக்காய் பச்சடி ரெடி.