அமேசான் என்கிற ஆச்சர்யம்- அமேசான் பற்றிய முழு தகவல்கள்

0
117

அமேசான் என்கிற ஆச்சர்யம்..
🔥
வருடமெல்லாம்
கொட்டும் மழை..
🔥
சூரிய வெளிச்சமே
பார்க்காத தரை..
🔥
மரங்கள்,
இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த
அடர்ந்த காடு..
🔥
அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்..
🔥
இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத
சில ஆயிரம் பழங்குடியினர்..
🔥
ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்..
🔥
இந்த காடுகள்
ஆபத்தானவை..
🔥
இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது..
🔥
இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்..
🔥
இச்சிறப்பான
அமேசான் காடுகளையும்,
அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்..
🔥
இதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும்..
🔥
இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்..
🔥
இந்த ஆற்றின் ஓட்டம்
பலமுறை மாறியுள்ளது..
🔥
முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த
இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது..
🔥
இந்த காடு மற்றும் நதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள்..
🔥
அமேசான் நதி பிறக்‍கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்‍ கொண்டு கடலில் சென்று கலக்‍கிறது..
🔥
இங்கு இருக்‍கும் 90 சதவீதத்துக்‍கும் மேற்பட்ட தாவரங்களை
இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை..
என்பது ஒன்றே
அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்‍கு உணர்த்தும்..
🔥
அமேசான் ஆற்றின்
எந்த இடத்திலும்
பாலம் வாயிலாக கடக்கப்படுவதில்லை..
🔥
இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும்..
🔥
எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை..
🔥
1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை..
🔥
அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும்..
🔥
மழைக்காலத்தில் வினாடிக்கு
300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக வினாடிக்கு 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது..
🔥
ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும்
12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது..
🔥
மழைக்காலத்தில்
ஆற்றின் ஆழம் சராசரியாக
40 அடியாகும்..
🔥
முதன்மை ஆறு தோராயமாக
ஒன்று முதல் ஆறு மைல்
அகலம் உடையது..
🔥
பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் ‘மனவுஸ்’ வரை செல்லலாம்..
🔥
சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில்
3600 கிமீ வரை செல்லலாம்..
🔥
அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஒரே சமயத்தில் வெள்ளப் பெருக்கு
ஏற்படுவதில்லை..
🔥
பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும்..
🔥
”அமேசான் மழைக்காடுகள்”

அமேசான் காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது..
🔥
சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது..
🔥
பூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது..
🔥
பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது (பூமியின் நுரையீரல்)
இந்த காடுகள்தான்..
🔥
மிகவும் ஈரப்பதம் கொண்ட
அமேசான் படுகை இம் மழைக்காடுகளுக்கு
அரணாக விளங்குகிறது..
🔥
இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன..
🔥
உயிரியல் வளம் மிக்க இம் மழைக்காடு, உலகில் உள்ள ஒரு கோடிக்‍கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்‍கும் மேல் இருக்‍கின்றன..
🔥
3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்‍கள் இந்த காடுகளில் உள்ளன..
🔥
உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன..
🔥
எண்ணற்ற செடி கொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள்..
🔥
அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உலகிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்) கொண்டதாக உள்ளது..
🔥
அமேசானில் கிடைக்கும் 3000
பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது. ஆனால் அங்கே வாழும் மக்கள்
சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்..
🔥
இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள்..
🔥
கி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள்..
🔥
ஆனால் இப்போது, வெறும்
2.5 லட்சம் பேர் தான் உள்ளனர்..
🔥
இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்‍களை சேர்ந்த மக்‍கள்
170 வகையான மொழிகள் பேசுகின்றனர்..
🔥
இன்றளவும் இயற்கைக்கு
மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்..
🔥
விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே
உண்டு வருகின்றனர்..
🔥
இவர்களுக்கு சமைப்பது
என்றால் என்ன என்றே
தெரியாது..
🔥
காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர் கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள
இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல்..
🔥
ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை..
🔥
ஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர்..
🔥
ஆனால் வாகனங்களின் வாயிலாக இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர்..
🔥
அவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவை தங்களை தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்..
🔥
உலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன..
🔥
பெரும்பாலும் இவை
நீரிலேயே வாழ்கின்றன..
🔥
இதன் மூக்குப் பகுதியை மட்டும்
நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்..
🔥
இந்தப் பகுதியில் காணப்படும்
ஈல் வகை மீன் ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது..
🔥
இது பாய்ச்சும் மின்சாரத்தால்
ஒரு மனிதனைக் கொன்று விட முடியும்..
🔥
தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள்
(Piranha) ஏராளமாக உள்ளன..
🔥
அதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம்..
🔥
ராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு..
🔥
இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன..
🔥
அமேசான் நதியில் எண்ணெய்
வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது..
🔥
அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது..
🔥
இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன..
🔥
இது ‘வாலியா ஹம்சா’ என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது..
🔥
அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது..
🔥
சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி ’ என்று அழைக்கப்படுகிறது..
🔥
நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்..
🔥
எனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது..
🔥
குளிரான அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில்
ஆவி பறக்க ஒரு கொதிக்கும்
ஆறு பாய்கிறது..
🔥
4 மைல் நீளமுடைய இந்த ஆறு பேரு நாட்டின் Mayantuyacu பகுதியில் Andrés Ruzo என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
🔥
இந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்..
🔥
இந்த ஆற்றுக்கு பின்புறத்தில்
ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது..
🔥
அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து பாறையில் விழும் நீர்தான் சூடாகிறது..
🔥
உடைந்த பாறை கற்களோடு ஆவி பறக்க அதன் கொதியாற்று படலம் ஆரம்பிக்கிறது..
🔥
இதன் அகலம் 25 மீட்டர் (82 அடி) இதன் ஆழம் 6 மீட்டர் (22 அடி) இதன் வெப்பம் ஆவி பறக்கும் அளவுக்கு Tea போடலாம் என Gizmodo ஆய்வு கூறுகிறது..
🔥
100 டிகிரிக்கான கொதிப்பும் ஆவியாதலும் இருக்கிறது..
🔥
விலங்குகள் மட்டுமல்ல நாம் தவறி விழுந்தாலும் வெந்து இறப்பது உறுதி..
🔥
இது சிறிய ஆறு..

ஆனாலும், இதற்கு, மொத்த நீர்பரப்பும் கொதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மதிப்பிலான வெப்பம் பூமியிலிருந்து எப்படி கிடைக்கிறது என்பதுதான் வியப்பு..
🔥
ஆனால், இந்த ஆற்றுக்கு வெகுதூரத்தில் தான் உயிரோட்டமான
எரிமலைகள் உள்ளன..
🔥
வெப்பத்திற்கு காரணமான பூமியின் வெப்ப ஊற்றுகள் ஓரிடத்தில் உள்ளதா இந்த ஆற்றுப்பாதையின் நெடுகிலும் உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை..
🔥
அமேசான்
இயற்கையின்
அதிசயம்..**
🔥