பெண்கள் யூடியூப்பில் பணம் சம்பாதிப்பது எப்படி?

0
151

யூடியூப் வீடியோக்களின் தரத்தை பொறுத்து, அதை பதிவேற்றிய, உருவாக்கிய சேனல்களுக்கு யூடியூப்பில் இருந்து வெகுமதி கொடுக்கப்படும்.

சமீபகால இளைஞர்களின் சுலபமான வேலைகளில் யூடியூப் சேனல் உருவாக்கமும் ஒன்று. மாடித்தோட்டம் அமைப்பது, செடி வளர்ப்பு முறைகள், சினிமா விமர்சனம், சமையல் குறிப்புகள், ஆடல்-பாடல்-நாடக பயிற்சிகள், மென்பொருள் மொழி வகுப்புகள், தொழில்வாய்ப்பு பயிற்சிகள், மீன்பிடி தொழில்நுட்பங்கள், படகு வாழ்க்கை முறைகள், கட்டிட வடிவமைப்பு திட்டங்கள், செல்லப்பிராணி வளர்ப்பு ஆலோசனைகள், மலிவு விலை சந்தை ரவுண்ட்அப், சுற்றுலா தலங்கள்…. என எத்தனையோ தலைப்புகளில், யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அதில் தினந்தோறும் புதுப்புது வீடியோக்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. விருப்பமான காட்சிகளை நம் கண்முன் கொண்டு வருவதால், மக்களும் அதை ரசிக்கிறார்கள். யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்கிறார்கள். இதனால் நமக்கு லாபம்தான், யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கும் லாபம்தான்.

ஆமாங்க….! யூடியூப் வீடியோக்களின் தரத்தை பொறுத்து, அதை பதிவேற்றிய, உருவாக்கிய சேனல்களுக்கு யூடியூப்பில் இருந்து வெகுமதி கொடுக்கப்படும். அதனால்தான், இளைஞர் பட்டாளம் கேமராவையும், மைக்கையும் கையில் ஏந்தியவாறு, சாலைகளில் உலா வருகிறார்கள். பிராங்க் கலாட்டா, கணவன்-மனைவி அன்பு சண்டைகள், குடும்ப உறவுகளின் பிரம்மாண்ட விழாக்கள், பாட்டி வைத்தியம், கிராமத்து சமையல், குழந்தைகளின் சுட்டித்தனம் என ரொம்ப எதார்த்தமான விஷயங்களை எல்லாம், வீடியோவாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்.

இதுபோல உங்களுக்கும் திறமை இருந்து, யூடியூப் சேனல் ஆரம்பிக்க ஆசை இருந்தால், இந்த கட்டுரை உதவியாக இருக்கும். படியுங்கள். யூடியூப்பில் சம்பாதியுங்கள்.

  • எப்படி சேனல் உருவாக்குவது?

யூடியூப்பில் உங்களுக்கு என தனிப்பட்ட கணக்கை உருவாக்கவேண்டும். டிரெண்டிங்கான பெயர்களை யூடியூப் சேனலுக்கு சூட்டினால், வெகு விரைவாகவே பிரபலமாகலாம். யூடியூப் சேனல் பெயர், வீடியோக்களில் தோன்றும் நபர்கள், பகிரும் கருத்துக்கள்… இவற்றை அடையாளமாக வைத்தே, சேனலின் வளர்ச்சி இருக்கும். ஒரே நாளில் பணக்காரனாக ஆகலாம் என்றெல்லாம் கனவு காணாதீர்கள்! ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் சம்பாதிக்கலாம், அது நீங்கள் பகிரும் வீடியோவைப் பொறுத்தது.

  • எதை வீடியோவாக மாற்றுவது?

எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறந்த கேமராவை அல்லது சிறந்த எடிட்டிங் மென்பொருள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடியுங்கள். நாய்க்குட்டி, பூனைக்குட்டி, குழந்தை செய்யும் சேட்டை, மனைவி செய்யும் சமையல், மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எதை வேண்டுமானாலும் வீடியோவாக உருவாக்கலாம்.

  • மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி?

யூடியூப் சேனலை பிரபலப்படுத்த நினைத்தால், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களின் வழியே பிரபலப்படுத்தலாம். சமூக வலைத் தளங்களில் உலா வரும் உங்கள் வீடியோக்களையும், யூடியூப் சேனல் பற்றிய தகவல்களையும் பார்த்து மக்கள், உங்கள் யூடியூப் கணக்கை பின் தொடர வாய்ப்பிருக்கிறது. எத்தனை நபர்கள் உங்களை பின் தொடர்கிறார்களோ, அதற்கு ஏற்ப பணம் உங்கள் வங்கி கணக்கில் வந்து சேரும்.

  • எப்படி பணம் பெறுவது?

யூடியூப்பின் பக்கத்தில் ‘எனது சேனல்’ என்பதைக் கிளிக் செய்தால் இதற்கான வழிமுறைகள் தோன்றும். அதில் மோனெட்டைசேஷன் என்ற வசதி இருக்கும். அதை ஆக்டிவேட் செய்தால் உங்கள் வீடியோக்களைப் பொறுத்து விளம்பரம் தெரியும். அதில் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் பெறுவதற்கு ‘ஆட்சென்ஸ்’ என்ற கணக்கு இருக்க வேண்டும். ‘ஆட்சென்ஸ்’ கணக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை. யூடியூப் சேனலுக்காகவே புதிய கணக்கு தொடங்கி, அதில் பணம் பெறலாம்.

  • எதை பதிவேற்றக்கூடாது?

வர்த்தக உரிமம் இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்தக்கூடாது. கவர்ச்சியான காட்சிகள், கருத்துகளை தவிர்க்கவேண்டும். ஏற்கனவே யூடியூப்பில் இருக்கும் வீடியோவை பதிவிறக்கம் செய்து, அதை புதிய பெயரில் உங்கள் கணக்கில் பதிவேற்றக்கூடாது. அதேபோல பிறர் பாடுவது, ஆடுவது, நடிப்பது, விளையாடுவது ஆகியவற்றை அவர் அனுமதியின்றி வீடியோவாக எடுத்து, பதிவேற்றுவதையும் தவிர்க்கவேண்டும்.

  • எப்போது பணம் கிடைக்கும்?

பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க, குறைந்தது பத்தாயிரம் பார்வையாளர்கள் உங்கள் வீடியோவை பார்க்கவேண்டும். (உங்கள் சேனல் 1000 subscriber மற்றும் 4000 மணி நேரம் பார்வையாளர்களால் பார்த்திருந்தால் தான் adsense அக்கௌன்ட் பெற முடியும்) பல்வேறு விளம்பரங்கள் மூலம் தான் நீங்கள் பணம் சம் பாதிக்க முடியும். மேலும் உங்கள் சேனலில் உள்ள அனலிட்டிக்ஸ் விருப்பத்தை சொடுக்கவும். மதிப்பிடப்பட்ட வருவாய்கள் உங்களுக்கு கிடைக்கும். அனலிட்டிக்ஸை பொறுத்தவரை வீடியோ பார்வைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பலவற்றை இங்கே பார்க்கலாம். நீங்கள் எத்தனை வீடியோக்கள் அப்லோடு செய்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால் அதற்கேற்ற வருமானம்தான் கிடைக்கும்.

  • எதில் உஷாராக இருக்கவேண்டும்?

பதிவேற்ற இருக்கும் வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் யூடியூப் தரும் ஆடியோ ஸ்வேப் வசதியை பயன்படுத்தக் கூடாது. காரணம் அந்த ஆடியோ ஸ்வேப் வசதியைப் பயன்படுத்தும் வீடியோவுக்கு காட்டப்படும் விளம்பரங்களுக்கான வருமானம் உங்கள் கணக்கில் வந்து சேராது. மாறாக அது கூகிள் கணக்கில்தான் போய் சேரும்.

  • பணம் அதிகமாக சம்பாதிக்கும் விஷயங்கள் எவை?

சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தல வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள் போன்றவை அதிகமாக பணம் சம்பாதிக்க பயன்படும்.

இந்த தகவலை வீடியோ வடிவில் பெற