மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல், கால வரையின்றி ஒத்திவைப்பு!

0
231

சென்னை: 2021 ஐபிஎல் தொடர் மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது, தேதி அறிவிக்கப்படாமல் காலவரையின்றி இந்த தொடர் நிறுத்தப்பட்டுள்ளது.

2021 ஐபிஎல் தொடர் மிகவும் பாதுகாப்பாக நடந்து வந்தது. வீரர்கள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு பயோ பபுள் முறையில் மிக பாதுகாப்பாக போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது.

ஆனால் இவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைள் எடுக்கப்படும் கூட தற்போது வீரர்களுக்கு கொரோனா வந்து போட்டிகள் மொத்தமாக தடை பட்டு உள்ளது. 2021 சீசனில் மீதமுள்ள போட்டிகள் நடக்குமா என்பதே சந்தேகம் ஆகியுள்ளது.

பல பாதுகாப்பு விதிமுறைகளுடன் தொடர் நடந்தாலும் கூட வீரர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு, தற்போது தொடர் ரத்தாகி உள்ளது. இதில் சில வீரர்கள் செய்த சிறிய தவறுதான் காரணமாக அமைந்தது. குறிப்பாக கொல்கத்தா அணியில் ஆடும் வருண் சக்ரவர்த்தி செய்த தவறும் கூட இந்த தொடருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

வரும் சக்ரவர்த்தி காலில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க சென்றவர், பின்னர் அப்படியே பயோ பபுளில் இணைந்தார். இவர் தன்னை தனிமைப்படுத்தாமல் அணியில் இணைந்தார். இவருக்கு கொரோனா ஏற்படவே அவரின் அணியில் சந்தீப் வாரியாருக்கு கொரோனா வந்தது.

இந்த சின்ன தவறால் நேற்று கொல்கத்தா பெங்களூர் போட்டிகள் நிறுத்தப்பட்டன. இதுதான் இந்த தொடரின் மிகப்பெரிய சிக்கலாகி அமைந்தது. இன்னொரு பக்கம் சிஎஸ்கே பவுலிங் கோச் பாலாஜிக்கு கொரோனா ஏற்பட்டது. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் சிஎஸ்கே அணியை 6 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

சிஎஸ்கேவோடு கடைசியாக ஆடிய மும்பை அணியை 6 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். இன்னொரு பக்கம் இன்று சாகாவிற்கு கொரோனா ஏற்பட்டதால் ஹைதராபாத் அணியின் இன்றைய போட்டி நடக்காது. அந்த அணியை 6 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

அதேபோல் அமித் மிஸ்ராவிற்கு கொரோனா ஏற்பட்டதால் டெல்லி அணியையும் 6 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். மொத்தம் இப்படி 4 அணிகளில் வீரர்கள் செய்த பயோ பபுள் விதிமுறை மீறலால் மொத்தமாக தொடருக்கே சிக்கல் ஏற்பட்டது.

முக்கியமான அணிகள் எல்லாம் இப்படி மொத்தமாக கொரோனாவில் சிக்கிய காரணத்தால் தற்போது போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல வாரங்களுக்கு போட்டிகள் நடப்பது சந்தேகம்தான்.