ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் – பிசிசிஐ அறிவிப்பு!

0
176

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள பல அணிகளின் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 ஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நேற்று நடைபெற ஐபிஎல் போட்டி நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இனி வரும் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல் பாலாஜி, மற்றும் ஒரு பணியாளருக்கு இன்று கொரோனா உறுதியாகி உள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் மோசமடைந்ததால் பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல்லை விட்டு வெளியேறினர். ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தங்களது நாடுகளுக்கு திரும்பி உள்ளனர். டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் தனது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.