சுதந்திர போராட்டத்தில் தமிழக தீவிரவாதிகள் பங்கு
காங்கிரஸ் தீவிரவாத தலைவர்கள்
- டிஎம். நாயர்.
- ஏ. இராமசாமி ஐயங்கார்.
- வ.உ. சிதம்பரம் பிள்ளை
- சுப்பிரமணிய சிவா.
- வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்.
- வாஞ்சிநாதன்
- எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார்.
- டி. ரெங்காச்சாரி.
- அரவிந்த கோஷ்.
- சுப்பிரமணிய பாரதியார்.
- நீலகண்ட பிரம்மச்சாரி.
- சுதேசி பத்மநாப ஐயர்.
- வ.உ.சி தமிழ்நாட்டுத் திலகர். தமிழகத்தின் தீவிரவாத தந்தை.
- தமிழ்நாட்டின் திலகரின் தளபதிகள் வ.உசி., சுப்பிரமணிய சிவா.
- ஆங்கில அரசின் செயல்பாடுகளை பத்திரிகைகள், துண்டு பிரசுரங்கள், கூட்டங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சென்றனர்.
1. சுதேசி இயக்கம்.
- வங்கப்பிரிவினைக்கு எதிராக தோன்றிய இயக்கம்.
- வங்காளம், பஞ்சாப், மகாராட்டிர மாகாணங்களில் புகழ்பெற்ற தலைவர்கள் தோன்றினர்.
- சுதேசி என்றால் உள்நாட்டு பொருள்.
- முழக்கம் “வந்தே மாதரம்”.
- கொள்கை “பூரண சுயராஜ்யம் அல்லது முழு விடுதலை”
- 1905ல் தமிழக மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
- தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் – வ.உ.சி., வி சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுதேந்திரநாத் ஆர்யா.
- தமிழகத்தில் சுதேசி இயக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்றது. வ.உ.சி கிராமம் தோறும் சென்று கருத்துக்கள் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- தலைவர்கள், மாணவர்கள், வழகறிஞர்கள், தொழிலாளிகள் கூடி வட்டார மொழியில் கூட்டங்கள் நடத்தினர்.
- சென்னையில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட், பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் சுதேசி தொடர்பான கூட்டங்கள் அதிகளவில் நடைபெற்றது.
- 1907ல் சென்னைக்கு வருகை தந்த பிபின் சந்திர பால் சென்னை கடற்கரை பகுதியில் ஆற்றிய உரைகள் அதிக உத்வேகத்தை ஏற்படுத்தியது. மதுரை வைத்தியநாத ஐயர் இதன் மூலம் காங்கிரஸில் தீவரமாக பங்காற்றினார்
- மக்களை ஒன்றுதிரட்ட முதன்முதலில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. காரணம் சுப்பிரமணிய பாரதியாரின் தேசபக்தி மிகுந்த பாடல்கள்.
- சுதேசி கருத்துக்களை சுதேச மித்திரன், இந்தியா ஆகிய பத்திரிக்கைகள் அதிகம் மக்களிடம் கொண்டு சேர்த்தன.
- 1905 – 1907 காலப்பகுதியைச் சேர்ந்த காவல்துறை அறிக்கைகள் மாணவர்கள் ஆபத்தானவர்கள், அவர்களின் நடவடிக்கைகள் ஆட்சிக்கு எதிரானவை என குறிப்பிடப்பட்டுள்ளன.