விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தொடக்க கால மிதவாதிகள் பங்கு-இந்திய தேசிய இயக்கம்-TNPSC

0
735

இந்திய தேசிய இயக்கம்

விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தொடக்க கால மிதவாதிகள் பங்கு.

தொடக்ககால தமிழக மிதவாத தலைவர்கள்

  1. விஎஸ் சீனிவாச சாஸ்திரி
  2. வி‌ கிருஷ்ணசாமி ஜயர்.
  3. ஜிஏ நடேசனார்.
  4. எஸ். சுப்பிரமணியனார்.
  5. பிஎஸ். சிவ சாமி.‌
  6. டி‌ஆர் வேங்கடரமணர்.
  7. டிஎம் மாதவ ராவ்.
  8. வரதராஜுலு நாயுடு.
  9. திரு.வி‌.க
  10. பெரியார்.
  11. எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார்.
  12. இராஜாஜி.
  • சென்னை மகாஜன சபை போன்ற மாகாண அமைப்புக்கள் அகில இந்திய அளவிலான நிறுவப்படுவதற்கு வழிகாட்டியது.
  • தமிழக மிதவாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுவதற்கு முன்பே பங்கெடுத்தனர்.
  • 1884 டிசம்பரில் பிரம்மஞான சபை சார்பில் சென்னையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
  • இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் 27 டிசம்பர் 1885ல் பம்பாயில் நடைபெற்ற போது தமிழகத்தில் இருந்து 22 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். (பூனாவில் நடைபெற திட்டமிட்ட இக்கூட்டம் பிளேக் நோய் காரணமாக
  • தமிழக பிரதிநிதிகள் அனைவரும் சென்னை மாகாண சங்கம் சார்பில் கலந்து கொண்டவர்கள்.
  • மாநாட்டின் முதல் தீர்மானத்தை ஜி சுப்பிரமணிய ஐயர் முன்மொழிந்தார்.
  • ஜி சுப்பிரமணியம் தனது எழுத்துக்கள் மூலம் தேசியத்தை முன் எடுத்தார். (தி ஹிந்து 1878. சுதேச மித்திரன் 1891ல் வாரயிதழாக வெளிவந்தது. 1899ல் நாளிதழாக சுதேசமித்திரன் மாற்றம் பெற்றது.)
  • தமிழில் வெளிவந்த முதல் நாளிதழ் சுதேசமித்திரன்.
  • இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு 1887ல் சென்னை ஆயிரம் விளக்குத்திடல் மக்கீஸ் தோட்டத்தில் நடைபெற்றது. முதன்முதலில் திறந்த வெளியில் நடைபெற்ற மாநாடு
  • சென்னை மாநாட்டிற்கு தலைமை பக்ருதீன் தயாப்ஜி. (முதல் இஸ்லாமிய தலைவர்)
  • இந்த 3வது மாநாட்டில் “காங்கிரஸ் வினா விடை” அல்லது “இந்த தேசத்தில் வருடாவருடம் கூடிவரும் காங்கிரஸ் ஜனசபையின் சரித்திரம்” என்ற நூலை முடும்பை வீர ராகவாச்சாரியார் வெளியிட்டார்.
  • இந்த மாநாட்டின் போது சென்னை கவர்னராக கன்னிமாரா பிரபு இருந்தார். மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு விருந்து அளித்தார்.
  • 607 அகில இந்திய பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 362 பிரதிநிதிகள் சென்னை மாகாணத்தைச் சார்ந்தவர்கள்.
  • 1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக சேலத்தைச் சேர்ந்த சி.விஜயராகவாச்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1926 கௌஹாத்தி காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக எஸ்.சீனிவாச ஐயங்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சுதந்திரத்திற்கு முன்பாக சென்னையில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் 7 முறை நடைபெற்றுள்ளது.
  • 1887 – தலைவர் பக்ருதீன் தயாப்ஜி
  • 1894 – தலைவர் ஆல்பிரட் வெப்
  • 1898 – தலைவர் ஆனந்த மோகன் போஸ்.
  • 1903 – தலைவர் லால் மோகன் கோஷ்.
  • 1908 – தலைவர் ராஷ்பிகாரி கோஷ்.
  • 1914 – தலைவர் பூபேந்திரநாத் போஸ்.
  • 1927 – தலைவர் எம்ஏ அன்சாரி
  • சென்னை மாகாணம் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் பெரும் பகுதிகள், கடற்கரை மாவட்டம் ராயலசீமா, கர்நாடகாவில் பெங்களூரு, பெல்லாரி, தெற்கு கனரா,
    கேரளாவில் மலபார் மற்றும் ஒடிசாவின் கஞ்சம் இப்பகுதிகளை உள்ளடக்கியது.
  • தமிழகத்தின் மிதவாத தந்தை சேலம் விஜராகவாச்சாரியார்.
  • மேலும் சில மிதவாதிகள்

சுதந்திர போராட்டத்தில் மிதவாத பத்திரிக்கைகள் பங்கு

  • டி. முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக 1877ல் நியமிக்கப்பட்டார். இது ஆங்கிலேயர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இந்த நியமனத்தை சென்னை மாகாண அனைத்து பத்திரிக்கைகளும் விமர்சித்தன.
  • விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்த அனைத்து பத்திரிகைகளும் ஐரோப்பியர்களால் நடத்தப்படுவதை கல்வி கற்ற இந்திய இளைஞர்கள் உணர்ந்தனர்.
  • இதனைத் தொடர்ந்து ஜி சுப்பிரமணிய ஐயர் 1878 ல் தி இந்து என்ற பத்திரிகை தொடங்கினார்.
  • இந்தியன் பேட்ரியாட் – ஹரீஷ் சந்திர முகர்ஜி
  • சவுத் இந்தியன் மெயில் – 1868 – சார்லஸ் லாசன், ஹென்றி கார்னியல்.
  • மெட்ராஸ் ஸ்டேன்டர்ட் -1904 – பாரீஸ் பரமேஸ்வரன், ஜிபி பிஸ்வா.