Home Uncategorized அதிகாலைத் தேர்வு – 6ஆம் வகுப்பு அறிவியல் | Day 01

அதிகாலைத் தேர்வு – 6ஆம் வகுப்பு அறிவியல் | Day 01

0
67

Day 01 – 6th Science Book Back Questions

21 days Early bird challenge practice
தினமும் காலை 4.20 மணி முதல் 4.30 மணி வரை மனதினை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பின்னர் 4:30 மணி முதல் 6.30 மணி வரை படிக்கலாம்… 21 நாட்கள் இந்த பயிற்சியினை தொடரும் பட்சத்தில் மிகப்பெரிய மாற்றத்தினை நீங்கள் உணர்வீர்கள். படிக்க இயலாமல் நாட்களை வீணாக்குகிறோம் என்று வருத்தப்படுகிறவர்கள் இந்த பயிற்சி மூலம் பயன் பெறலாம்.

  1. அதிகாலை விழிப்பு: தினமும் அதிகாலை 4:00 மணிக்கு உற்சாகமாக எழ வேண்டும்.
  2. தூய்மை பேணுதல்: காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு அல்லது முகம், கை, கால்களை அலம்பி விட்டு படுக்கையில் இருந்து சற்று தூரம் தள்ளி படிக்க அமர வேண்டும்.
  3. குழுச் செயல்பாடுகள்: அதிகாலை 4:20 முதல் 4:30 மணிக்குள் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்படும் செயல்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.
  4. காலை நேரப் படிப்பு: அதிகாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை தொடர்ந்து படிக்க வேண்டும்.
  5. உடல் நலம்: காலை 6:30 மணி முதல் 7:00 மணி வரை எளிய உடற்பயிற்சி, யோகாசனம் அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  6. பகல் நேரத் திட்டம்: பணி இல்லாதவர்கள் பகல் நேரத்தைத் துல்லியமாகத் திட்டமிட்டுப் படிக்க வேண்டும்.
  7. *மாலை நேரப் படிப்பு: இரவு 7:00 மணி முதல் 9:30 மணி வரை படிக்க வேண்டும்
  8. முன்கூட்டியே திட்டமிடல்: மறுநாள் காலை என்ன படிக்க வேண்டும் என்பதை முந்தைய நாள் இரவே முடிவு செய்து, புத்தகங்களை எடுத்து வைத்துவிட வேண்டும்.
  9. உறக்க நேரம்: அதிகாலை 4:00 மணிக்கு எழ ஏதுவாக, முந்தைய நாள் இரவு 10:00 மணிக்குள் கட்டாயம் உறங்கச் செல்ல வேண்டும்.

1.நிதானம்: எந்தச் செயலைச் செய்தாலும் அதனை மெதுவாக உணர்ந்து செய்ய வேண்டும்.

2.தொடர்ச்சி: இந்தப் பயிற்சியைக் கட்டாயமாகத் தொடர்ந்து 21 நாட்கள் பின்பற்ற வேண்டும்.

3.சமூக வலைதளத் தடை: இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அலைபேசியில் இருந்து நீக்க வேண்டும்; அலைபேசி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.

4.மாற்று உடற்பயிற்சி: நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் 5 நிமிடம் ‘மகாராசனம்’ செய்ய வேண்டும்.

5.பேச்சைக் குறைத்தல்: வீணாகப் பேசுவதைக் குறைத்து, மௌனப் பயிற்சி மற்றும் சுய பரிசோதனையில் ஈடுபட வேண்டும்

    JOIN HERE:
    ➡️https://chat.whatsapp.com/HfEvsf5orhyCvT0X0vHppK?s=cl&p=a&ilr=4&amv=2

    21 நாட்களுக்கும் காலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை படிப்பதற்கான பாடப்பகுதி வழங்கி உள்ளோம்.

    பாடப் பகுதியை படித்த பின்னர் காலை 6.30 மணிக்கு இந்தப் பாடப் பகுதியில் இருந்து தேர்வுகள் வழங்கப்படும்..

    மேற்கண்ட பாடப்பகுதி TNPSC/TET/SPECIAL TET/SGT/TNUSRB ஆகிய தேர்வுகளுக்கு தயாராகிறவர்களுக்கு பொதுவான பாட பகுதியாகும்..

    இந்த கால அட்டவணை உங்களுக்கு உகந்ததாக இல்லாவிடில் உங்களுக்கு ஏற்றாற் போல 21 நாட்களுக்கான பாடப்பகுதியை வரையறுத்து கால அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
    குழுவில் இன்று இரவு கால அட்டவணை தயாரித்து விட்டீர்களா என்று poll கேட்கப்படும். அதற்குள் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.


    error: Content is protected !!