TNPSC GROUP-04 தேர்வில் வெற்றியின் விளிம்பு வரை சென்று வந்தவரா நீங்கள்? உங்களுக்காக சில வரிகள்…
போட்டி தேர்வில் தோல்வி யாருக்கும் சொந்தம் இல்லை. நாம் தான் உருவாக்கி கொள்கிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
இந்த முறை தோல்வி கண்டவர்கள் என்னால் இயலாது என்று விலகி விடாதீர்கள். உங்களுக்காக மிகப் பெரிய வெற்றி காத்திருக்கிறது. 90% வெற்றியை நெருங்கி விட்டீர்கள் . இன்னும் 10% தான் மீதம் இருக்கிறது. முழு நம்பிக்கையோடு தயாராகுங்கள். வெற்றி நிச்சயம். .
- சூழ்நிலை
2.பிரச்சனை - சோம்பேறித்தனம்
- அலட்சியம்
- நம்பிக்கை இல்லாமல் புத்தகம் தொடுவது
- மற்றவர்களுக்காக படிப்பது
- நேரம் வீணாக்கி விட்டு பிறகு அவசரத்தில் படிப்பது
- எதை படிக்க வேண்டும் என்று தெரியாமல் படித்தது
- திட்டமிடாமல் படித்தது
- அதிகமான செல்போன் பயன்பாடு
ஆகிய காரணங்களால் நாம் வெற்றி வாய்ப்பை இந்த முறை இழந்துள்ளோம்.. ஆனால் அடுத்து 2025 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் GROUP-04 தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்…
ஏனெனில்
1.2025 ஆம் ஆண்டிற்கு பின்னர் நிச்சயம் இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து தான் அடுத்த தேர்வு வரும்
- பாட புத்தகங்கள் மாறலாம்
- உங்கள் வயது அதிகரித்து வயதுவரம்பு காரணமாக தேர்வு எழுத இயலாமல் போகலாம்
- குடும்ப சூழல் மாறி இருக்கலாம்
ஆதலால் இனி வரும் தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவது அவசியமாகிறது.
👉இந்த முறை உங்கள் முழு ஆற்றலையும் ஒன்று சேர்த்து வெற்றிக்காக போராடுங்கள். உங்கள் தோல்விக்கான காரணத்தை அலசி ஆராயுங்கள். அதில் கண்டறிந்த தவறுகளை மீண்டும் நடைபெறாது பார்த்துக் கொள்ளுங்கள். .
👉அதிக தேர்வுகளில் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். பள்ளி பாட புத்தகங்கள் மட்டுமல்லாது, INM, POLITY போன்ற பாடப்பகுதிகளுக்கு கூடுதலாக புத்தகங்கள் வாங்கி அதை படித்துக் கொள்ளலாம்..
👉நீங்கள் படிக்கும் விதத்தினை மாற்றிப் பாருங்கள்
👉வெற்றி ஒன்றே உங்களது இலக்கு அந்த இலக்குக்காக அதற்கு தடையாக இருக்கும் அத்தனையையும் தியாகம் செய்யுங்கள்.
👉பொழுதுபோக்கு, திரைப்படங்கள், திருவிழாக்கள், திருமண விழாக்கள் ஆகியவற்றிலிருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள். வெற்றி பெற்ற பின்னர் அதையெல்லாம் கொண்டாடிக் கொள்ளலாம்.
👉உயிரைக் கொடுத்து படியுங்கள். அதாவது இந்த முறை படிக்கும் காலகட்டத்தில் உங்கள் எடை குறைய வேண்டும் அந்த அளவுக்கு உங்களது பயிற்சி கடினமானதாக இருக்க வேண்டும் ( உங்கள் ஆரோக்கியம் முக்கியம்)
வெற்றி ஒன்றே நம் இலக்கு
அந்த இலக்குக்காக அதற்கு தடையாக இருக்கும் அத்தனையையும் முறியடிப்போம்!!!
வாழ்த்துக்களுடன் உங்கள் தமிழ் மடல்