SGT/TET ENGLISH RELATIVE PRONOUN
ஒரு சில வாக்கியங்களில், NOUN-க்குப் பதிலாக Which,when, what, why, who, whom, whose, where, that போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வார்த்தைகள் PRONOUN ஆக செயல்பட்டு வாக்கியத்தின் இரு பகுதியை இணைப்பதால் இதனை RELATIVE PRONOUN என்பர்.
RELATIVE PRONOUN SHORTCUT
⏩______க்கு முன்னால் இடப்பெயர் வந்தால் WHERE பயன்படுத்த வேண்டும்
⏩______க்கு முன்னால் things, animals,abstract noun வந்தால் WHICH/THAT பயன்படுத்த வேண்டும்
⏩_____க்கு முன்னால் Verb வந்தால் WHAT பயன்படுத்த வேண்டும்
⏩_____க்கு முன்னால் நபரை குறிப்பிட்டு_____க்கு பின்னால் verb வந்தால் WHO பயன்படுத்த வேண்டும்
⏩_____க்கு முன்னால் நபரை குறிப்பிட்டு_____க்கு பின்னால் Pronoun (I,YOU,WE,THEY,HE,SHE,IT) வந்தால் WHOM பயன்படுத்த வேண்டும்
⏩_____க்கு முன்னால் நபரை குறிப்பிட்டு_____க்கு பின்னால் இந்த நபர் சம்பந்தப்பட்ட இன்னொரு NOUN/THINGS/PLACE வந்தால் WHOSE பயன்படுத்த வேண்டும்.
⏩ வாக்கியத்தில் காரணத்தை குறிப்பிடும் பொழுது WHY பயன்படுத்த வேண்டும். நேரத்தை குறிப்பிடும் பொழுது WHEN பயன்படுத்த வேண்டும்.