
IF CONDITIONAL CLAUSE RULES

If I were a bird, I would fly

மேற்கண்ட வாக்கியத்தில் இரண்டு பகுதியாக பிரிக்கலாம் அதில் முதல் பகுதி தனியாக இருந்து பொருள் உணர்த்தாததால் அதனை DEPENDENT CLAUSE எனவும் இரண்டாவது பகுதி தனியாக இருந்து முழுமையான பொருள் கொடுப்பதால் அதனை INDEPENDENT CLAUSE எனவும் கூறுவோம். IF வரும் DEPENDENT CLAUSE-ஐ IF CLAUSE என்று அழைப்போம்.
தேர்வுகளில் நமக்கு DEPENDENT CLAUSE AND INDEPENDENT CLAUSE இரண்டில் ஒரு பகுதியில் VERB கொடுக்கப்பட்டு மற்றொரு பகுதியில் VERB கோடிட்ட இடமாக கேட்கப்படும்.
Fill in the blanks
If I were a bird, I___fly
இது மாதிரியான வினாக்களுக்கு பதில் அளிக்க நமக்கு 4 விதிமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
If clause-இல் உலக உண்மைகளை குறிப்பிடும் பொழுது இரு புறமும் Simple Present tense பயன்படுத்த வேண்டும்.
e.g If you heat ice, it melts
If CLAUSE-இல் Simple present tense வந்தால் Independent clause இல் Will பயன்படுத்த வேண்டும்
e.g If you play well, you will win
If CLAUSE-இல் Simple past tense வந்தால் Independent clause இல் Would பயன்படுத்த வேண்டும்.
e.g If you played well, you would win
If CLAUSE-இல் past perfect tense வந்தால் Independent clause இல் Would have + v3 பயன்படுத்த வேண்டும்.
e.g If you had played well, you would have won