SENTENCE PATTERN-SHORT EXPLANATION IN TAMIL

0
1407

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் யாரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறதோ அதுவே SUBJECT ஆகும். அதாவது கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் யார்/எது என்ற வினாவிற்கு விடை அளிப்பதாக அமைந்திருக்கும் சொல்லே SUBJECT ஆகும்.

E.g – THE CHILDREN PLAY CRICKET

மேற்கண்ட வாக்கியத்தில் யார் விளையாடுகிறார்கள் என்ற வினாவிற்கு குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்று பதில் அளிப்பதாக அமைந்துள்ளது. ஆகவே மேற்கண்ட வாக்கியத்தில் CHILDREN-SUBJECT ஆகும்

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் SUBJECT என்ன செய்கிறது என்பதற்கான விடையே Verb ஆகும். (VERB- MAIN VERB, SUB VERB)

E.g – THE CHILDREN PLAY CRICKET

மேற்கண்ட வாக்கியத்தில் குழந்தைகள் என்ன செய்கிறது என்பதற்கு குழந்தைகள் விளையாடுகிறது என்று பதில் அளிக்கலாம் ஆகவே மேற்கண்ட வாக்கியத்தில் PLAY-VERB ஆகும்.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் SUBJECT எதனை பயன்படுத்துகிறதோ அதுவே OBJECT ஆகும்.

E.g – THE CHILDREN PLAY CRICKET

மேற்கண்ட வாக்கியத்தில் எதனை விளையாடுகிறார்கள் என்பதற்கு கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்று பதில் அளிப்பதால் இங்கு CRICKET – OBJECT ஆகும்

ஒரு சில வாக்கியங்களில் இரண்டு OBJECT வரலாம்.OBJECT-ஐ இரண்டு வகையாக பிரிக்கலாம்.

இதை பெரும்பாலும் உயிரற்ற பொருளையோ அல்லது விலங்குகளையோ குறிப்பதாக அமையும். What என்பதற்கு விடை அளிப்பதாக அமையும்.

E.g – I GAVE HIM A BOOK

மேற்கண்ட வாக்கியத்தில் நான் அவனுக்கு என்ன கொடுத்தேன் என்பதற்கு விடை அளிப்பதாக book அமைந்திருப்பதால் இங்கு BOOK- DIRECT OBJECT ஆகும்.

இதை பெரும்பாலும் நேரடியாகவோ (NOUN) அல்லது மறைமுகமாகவோ (PRONOUN) உயிருள்ள ஒருவரை குறிப்பதாக அமையும். அதாவது ஒரு வாக்கியத்தில் யாருக்கு என்பதற்கு விடை அளிப்பதாக அமையும் சொல் INDIRECT OBJECT ஆகும்

E.g – I GAVE HIM A BOOK

மேற்கண்ட வாக்கியத்தில் புத்தகத்தை யாருக்கு கொடுத்தேன் என்பதற்கு அவனுக்கு கொடுத்தேன் என்று பதில் அளிப்பதால் இங்கு HIM என்பது INDIRECT OBJECT ஆகும்

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் செயலானது எங்கு எப்போது எப்படி நடைபெற்றது என்பதற்கான விடையளிப்பதாக அமையும் வார்த்தைகள் SUBJECT ஆகும்

E.g –

THE CHILDREN PLAY CRICKET IN THE PARK

THE CHILDREN PLAYED CRICKET YESTERDAY

THE CHILDREN PLAY CRICKET SLOWLY

மேற்கண்ட வாக்கியங்களில் செயல் எங்கு நடந்தது என்பதற்கு IN THE PARK விடையாகவும், எப்போது நடைபெற்றது என்பதற்கு YESTERDAY விடையாகவும், எப்படி நடைபெற்றது என்பதற்கு SLOWLY விடையாகவும் அமைந்துள்ளதால் இவை ADJUNCT ஆகும்.

வாக்கியத்தை முழுமையாக்கும் பணியை COMPLEMENT செய்கிறது. கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் SUBJECT-இன் பண்பையோ, பதவியையோ, மற்றொரு பெயரையோ குறிப்பிட்டால் அது COMPLEMENT ஆகும்.

HE IS A TEACHER (பதவி)

HE IS UGLY (பண்பு)

THEY NAMED THE CHILD SURYA (பெயர்)

S. NOPARTS OF SPEECHQUESTION
1SUBJECTWHO/WHICH
2VERBWHAT DOING
3DIRECT OBJECTWHAT
4INDIRECT OBJECTWHOM
5ADJUNCTWHEN, WHERE, HOW
6COMPLEMENT