ஏப்ரல். 2:இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்

0
379

ஏப்ரல். 2:இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்!👉ஆட்டிசம் என்றால்  தமிழில் ‘மதி இறுக்கம்’ என்று பொருள். 👉அதனால், உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (WORLD AUTISM AWARENESS DAY) என்றும் அழைக்கப்படுகிறது.👉ஆட்டிசம் (அ) புற உலகச் சிந்தனை குறைபாடு என்பது மூளை வளர்ச்சி தொடர்பான ஒரு குறைபாடே தவிர, நோயல்ல.👉ஒரு வயது முதல் 3 வயது குழந்தைகள்தான் பெரும்பாலும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். 👉இந்தியாவில் 100-க்கு ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது. 👉உலக ஆட்டிசம் தினம், கடந்த 2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்படுத்தப்பட்டது. 👉ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டலில் 2008-ம் ஆண்டிலிருந்து உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. 👉2023-ம் ஆண்டில் 16-வது முறையாக இதை உலக நாடுகள் கடைப்பிடிக்கின்றன. 👉“வீடு, பணியிடம், கலைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு நிலைகளில் உள்ள ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களின் பங்களிப்பைப் போற்றி ஏற்றுக்கொள்ளும்” விதத்தில் இந்த ஆண்டிற்கான நிகழ்வுகளைத் திட்டமிட ஐ.நா. பரிந்துரைத்துள்ளது.