பிப்ரவரி-28-நவீன இலக்கிய எழுத்தாளர் தி.ஜானகிராமன் பிறந்த நாள்!

0
474

பிப். 28:

இன்று நவீன இலக்கிய எழுத்தாளர் தி.ஜானகிராமன் பிறந்த நாள்!

👉சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர் தி.ஜானகிராமன்.

👉இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடியில் 1921 பிப்ரவரி 28-ம் தேதி பிறந்தார்.

👉உமையாள்புரம் சாமிநாதர், மிருதங்கம் சுப்பையர், பத்தமடை சுந்தரம் ஆகியோரிடம் இசை கற்றார்.

👉கும்பகோணம் அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார்.

👉ஐரோப்பிய இலக்கியங்கள் கற்றார்.

👉‘கணையாழி’ மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

👉1964-ல்வெளியான இவரது ‘மோகமுள்’ நாவல், திரைப்படமாக தயாரிக்கப் பட்டது.

👉‘அமிர்தம்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’, ‘நளபாகம்’உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். ‘

👉’அம்மா வந்தாள்’ நாவல் ஆங்கிலம்,குஜராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

👉பல குறு நாவல்கள், ஏராளமானசிறுகதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.

👉‘மனிதாபிமானம்’, ‘சக்தி வைத்தியம்’, ‘யாதும் ஊரே’ உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.

👉இலக்கியம், இசை பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

👉நல்ல மொழிபெயர்ப்பாளரும்கூட.

👉‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றார்.