பிப்ரவரி 28:தேசிய அறிவியல் நாள்!

0
599

பிப்ரவரி 28:
தேசிய அறிவியல் நாள்!

👉இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்தியர்,
சர்.சி.வி.ராமன் என்றழைக்கப்படும் சந்திர சேகர வெங்கட்ராமன்.

👉 இவர், 1928இல் ‘ஒளி புகக்கூடிய ஓர் ஊடகத்தின் வழியாகப் பாயும் ஒளியின் அலைநீளம் ஏன் மாறுகிறது’ என்பதை விளக்கினார்.

👉இது அவரது கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டு, ‘ராமன் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது.

👉இதற்காக 1930இல் சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

👉பிப்ரவரி 28 அன்றுதான் ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டது என்பதால், அந்த நாளை தேசிய அறிவியல் நாளாக 1986 இல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய மன்றம் (National Council for Science and Technology) அறிவித்தது.

👉இதன்படி 1987முதல் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் நாளை இந்திய அரசு கொண்டாடி வருகிறது.

👉1999 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் தேசிய அறிவியல் நாள் நிகழ்ச்சிகள் திட்டமிடப்படுகின்றன.

👉2023ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் நாள் கருப்பொருள், ‘உலக நலனுக்கான உலக அறிவியல்’ (Global Science for Global Wellbeing).