
TNPSC GROUP-04 RESULT LATEST NEWS
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியியிடப்படும்!
ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் வரும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய ஓ.எம்.ஆர். விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் மேலாக உள்ளது.
மேலும், பிழைகளை கணினி மூலம் அடையாளம் காண நேரடி அலுவலர் மூலம் உறுதி செய்ய அவகாசம் தேவை எனவும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.
எவ்வித தவறுகளுக்கும் இடம்தராமல், குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.

FOR MORE DETAILS-CLICK HERE