TET PAPER-01 தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமன தேர்வில் (SGT) வெற்றி பெறுவது எப்படி?

0
323

அனைவருக்கும் வணக்கம்…

🔹TET PAPER-01 தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமன தேர்வு (SGT) மே அல்லது ஜூன் மாதங்களில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது…

🔹கிட்டத்தட்ட 6000 காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட இருக்கின்றன…

🔹இதுவரை TET PAPER-01 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்த தேர்வினை எழுதலாம்..

🔹இதற்கான பாடத்திட்டம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப் பிரிவுகளில் இருந்து தலா 30 வினாக்கள் வீதம் 150 வினாக்கள் கேட்கப்படும்…

இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?

🔹கண்டிப்பாக பாட புத்தகங்களை மட்டும் மூன்று முறை மிகத் தெளிவாக படிக்க வேண்டும்..

🔹பின்னர் அந்தப் பகுதிக்கான மாதிரி வினாக்களை கொண்டு படித்தவை நினைவில் இருக்கிறதா என்று ஆராய வேண்டும்

🔹நமது தமிழ் மடல் இணையதளம் கிட்டத்தட்ட 120 தேர்வுகளை இந்த தேர்வுக்கான பாடப்பகுதியில் ஏற்கனவே வழங்கியுள்ளது அதை பயன்படுத்தி கொள்ளலாம். .

🔹பாடத்திட்டம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை என்று இருந்தாலும் கூட 11 ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பாடப் பகுதியையும் தெளிவாக படித்துக் கொள்வது நன்று

🔹மூன்று நான்கு பேர்கள் ஒரு குழுவாக இருந்து படிப்பது நிச்சயம் பயனளிக்கும் எனவே குழுவாக இருந்து படிக்கும் வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளுங்கள்

🔹Cut off முறையில் நியமனங்கள் இருக்கும் என்பதால் இந்தத் தேர்வில் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது . .

🔹6000 காலியிடங்கள் என்பது ஒரு வரப்பிரசாதம். . 6000த்தில் ஒருவராக வருவது மிக மிக எளிமையான ஒன்று. ஆனால் இதற்கு பின்னர் இதே போன்ற ஒரு சிறந்த வாய்ப்பு கிடைப்பது அரிது. எனவே இந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்..

🔹இன்று முதல் படிக்க தொடங்குங்கள்… நமது தமிழ் மடல் வழங்கும் இலவச மற்றும் கட்டண தேர்வு தொகுப்பில் இணைந்திருங்கள். உங்களது வெற்றிக்கு நிச்சயமாக நமது தமிழ் மடல் இணையதளம் துணை நிற்கும்… நம்பிக்கையுடன் தயாராகுங்கள். .நன்றி..