பிப். 24: இன்று தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த நாள்

0
395

பிப். 24: இன்று தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த நாள்!

👉தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கியவர் ஆர்.முத்தையா.

👉 இவர், இலங்கை யாழ்ப்பாணத்தில் 1886 பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தார்.

👉1913-ல் சர்வதேச சுருக்கெழுத்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

👉ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழில் தட்டச்சு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருதினார்.

👉தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் 4 வரிசைகளில் 46 விசைகளுக்குள் அடக்குவது சவாலாக இருந்தது.

👉பல எழுத்துகளுக்குப் பொதுவாக உள்ள குறியீடுகளை தனித்தனி விசைகளில் அமைத்தார்.

👉இரண்டு விசைகளை அழுத்திய பிறகே அச்சு நகர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ‘நகரா விசை’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கினார். அதற்கு ‘ஸ்டாண்டர்டு தட்டச்சு’ என பெயரிட்டார்.

👉ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய 10 மடங்கு அதிக எழுத்துகள் கொண்ட தமிழ் மொழியை விசைகளுக்குள் அடக்கி தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கினார்.

👉இவரை பார்த்து பல மொழியினரும் தம்முடைய மொழிகளில் தட்டச்சு சாதனங்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.