பிப். 20: இன்று  தமிழ்ப் பண்டிதர் நமச்சிவாயம் பிறந்த நாள்

0
442

பிப். 20: இன்று  தமிழ்ப் பண்டிதர் நமச்சிவாயம் பிறந்த நாள்!👉சிறந்த புலவராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கியவர் நமச்சிவாயம். 👉வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் 1876 பிப்ரவரி 20-ம் தேதி பிறந்தார். 👉1902 முதல் 1914 வரை சென்னை வேப்பேரியில் இருந்த எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் (தற்போது புனித பால்ஸ் பள்ளியில்) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.👉1914-ல் பெண்களுக்கென இராணி மேரிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார். 👉சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக 1920 முதல் 1934 வரை பணியாற்றினார். 👉1905 வரை மாணாக்கர் தமிழ்ப் பாடங்களைப் படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையைப் போக்க நமச்சிவாயரே தமிழ்ப்பாட நூல்களை எழுதத் தொடங்கினார். 👉எஸ்.எஸ்.எல்.சி, இன்டர் மீடியட், பி.ஏ. ஆகிய வகுப்புகளில் இவரது பாட நூல்களே இடம்பெற்றன. 👉இவரது நினைவைப் போற்றும் வகையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் “நமச்சிவாயபுரம்” என்ற குடியிருப்புப் பகுதியும் இவரின் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்க்கிறது.