தென்மாவட்ட மக்களுக்கான தீபாவளி சிறப்பு ரெயில் – முன் பதிவு இன்று தொடக்கம் (23-10-2024)

0
94

திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்து, ரயில்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் காலியாகவிட்டன. இதனால், பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல ரயில்வேயும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி, செண்ட்ரல் – செங்கோட்டை, தாம்பரம் – கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (சூப்பர் பாஸ்ட்): (TBM – NCJ)


வண்டி எண் 06049 தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து வரும் 29, நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12ம் தேதி 00.35 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் பகல் 12.15க்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறு மார்க்கத்தில் வண்டி எண் 06050 கன்னியாகுமரி – தாம்பரம் சிறப்பு ரயில், கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12ம் தேதிகளில் மாலை 3.35க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30க்கு சென்னை தாம்பரம் வந்து சேரும்.

 செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களில் இரு மார்க்கத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. * 

சென்னை செண்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்:(MAS-NCJ)


வண்டி எண் 06001/06002: சென்னை செண்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 29 ஆம் தேதி மற்றும் நவம்பர் 5 ஆம் தேதி இயக்கப்படும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 ஆம் தேதி சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும். செண்ட்ரலில் இருந்து இரவு 11.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருதச்சலம் திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில் பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூருக்க்கு(MS) வந்து சேரும்.