TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-23(6TH TO 10TH SOCIAL SCIENCE FULL)

0
1937

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-23(6TH TO 10TH SOCIAL SCIENCE FULL)

TET PAPER-02 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில் நமது தமிழ் மடல் இணையதளம் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.48 தேர்வுகள் கொண்ட இத்தேர்வு தொகுப்பானது அக்டோபர் 18 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும். முழு மாதிரி தேர்வில் 150 வினாக்களும் மற்ற தேர்வுகளில் 50 வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும் .  தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும் . காலை 7 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தேர்விற்கான லிங்க் வழங்கப்படும்.தேர்விற்கான  லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்.

இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று பயன் பெறுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

TEST BATCH SCHEDULECLICK HERE

JOIN OUR WHATSAPP GROUPCLICK HERE

JOIN OUR TELEGRAM-CLICK HERE

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-23(6TH TO 10TH SOCIAL SCIENCE FULL)

Welcome to your 6th-10th SOCIAL FULL TEST (NEW)

1. …………… வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டைக்கு வாணிபத்திற்காக வந்தார்.

2. கூற்று : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது. காரணம் : பொருள்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

3. இந்தியாவில் வருமானவரிச்சட்டம் முதன் முதலில் …..ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

4. …………….. இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.

5. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார். 2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர். 3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர். 4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.

6. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?

7. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.

8. பின்வரும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும் I. வேலூர் புரட்சி 1801ம் ஆண்டு ஏற்பட்டது. II. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர் III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தார் IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.

9. தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?

10. கூற்று : இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர். காரணம் : பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.

11. 1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?

12. 1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?

13. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க:

14. கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.

15. நீர் மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின் மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்குச் செல்லும் முறைக்கு ______________

16. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க. கூற்று : நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும். காரணம் : கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல.

17. செர்னோபில் அணுக்கதிர் வீச்சு ஹீரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டை விட ___________ மடங்கு அதிகம்.

18. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது………………….

19. மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க. (i) சராசரி மழையளவு 15 சென்டிமீட்டர். (ii) கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும். (iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும். (iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன.

20. கூற்று : காணிப் புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமை பற்றிய விவரங்களை தெரிவிப்பதில்லை. காரணம் : இவை சிறிய அளவைகளைக் கொண்டு வரையப்பட்டுள்ளன.

21. மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்…………….

22. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?

23. சரியான கூற்றைத் தேர்ந்தெடு i) இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை விலைமதிப்பற்ற ஒன்றாகும். ii) சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை . iii) அரசியலமைப்பு பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது. iv) அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.

24. தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.

25. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி (சாலை பாதுகாப்பு விதிகள்)

26. கூற்று : பன்னாட்டு கூட்டுறவை இந்தியா ஆதரிக்கிறது. காரணம் : நட்பு – கூட்டுறவு மூலம் நாடுகளுக்கிடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.

27. பின்வரும் கூற்றை ஆராய்க i) இந்திய தண்டனைச் சட்டம் 1860இல் உருவாக்கப்பட்டது. ii) கல்கத்தா உயர்நீதிமன்றம் 1862இல் நிறுவப்பட்டது. iii) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது. மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை?

28. ‘எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம்’ என வரையறுத்து கூறியவர்?

29. இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்குக் காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம் ……… ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

30. ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? i) அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்டார். ii) அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார். iii) அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார். iv) அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது.

31. சரியான இணையைத் தேர்வு செய்க.

32. கூற்று : பூமியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு ஒப்பிடலாம். காரணம் : புவியின் உட்பகுதியானது மேலோடு, மெல்லிய புறத்தோல், புவிக்கருவம் ஆகியவற்றைக் கொண்டது.

33. கூற்று : முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாக்கப்படுகின்றன. காரணம் : கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.

34. அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக. 1) நகரம் 2) மீப்பெருநகரம் 3) தலைநகரம் 4) இணைந்த நகரம்

35. கீழ்க்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?

36. சமஸ்கிருத மொழியில் கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட நாடகத்தின் பெயர்.

37. வாக்கியம் -1 : செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர். வாக்கியம் – II : இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்படை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

38. கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

39. கூற்று : கி.பி. 1009ல் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது. காரணம் : இது ராஜேந்திர சோழன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

40. சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்க i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன. ii) ‘பள்ளி’ என்பது புத்த மதத்தாரின் கல்வி மையமாகும். iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பலவிகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது. iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து செயல்பட்டது.

41. உலகில் இரண்டாவதாக அதிகப்படியான இரும்புத்தாது இருப்பைக் கொண்டுள்ள நாடு …………………

42. கூற்று (A) : இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும். காரணம் (R) : ஹரிக்கேன் என்பது ஒரு இயற்கை இடர். இந்த சூறாவளி நிலத்தை அடையும் பொழுது கட்டடங்களையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்துகிறது.

43. கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே

44. அ) ‘திருநாவுக்கரசர், “கல்வியில் கரையில்” எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம். ஆ) இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம். இ) “நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம்” என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.

45. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க. 1. வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது. 2. ஜுன் 21 ம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும். 3. செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு. மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக

46. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?

47. சித்தார்த்தா தனது …………. வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார்.

48. உலகப்புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் … பள்ளத்தாக்கில் இருந்தன.

49. கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை?

50. தேசிய ஊராட்சி தினம் ……. ஆகும்.