பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் பற்றிய குறிப்புகள்-TNPSC NOTES

0
511

நவ.17:

இன்று பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் நினைவு நாள்!

👉வழக்கறிஞர் பணியை உதறிவிட்டு இந்திய விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படும் லாலா லஜபதி ராய்.

👉சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களுள் ஒருவர்.

👉1865 ஜனவரி 28-ம் தேதி பஞ்சாபில் பிறந்தார்.

👉1905-ல் வங்காளப் பிரிவினைக்கு பின்னர், சுதேசி பொருட்கள் பயன்பாடுகளை ஊக்குவித்தார்.

👉1917-ல் ஹோம் ரூல் லீக் இயக்கத்தை நிறுவினார்.

👉இவரின் முக்கிய நூல்களான “யங் இந்தியா, அன்ஹேப்பி” ஆங்கிலேயர் ஆட்சியில் துன்புற்ற இந்தியர்களின் நிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

👉1920-ல் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

👉1928-ல் அக்டோபர் 30-ம் தேதி லாகூரில் சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டிஷ் காவல் துறையினரால் தாக்கப்பட்டு 1928 நவம்பர் 17-ம் தேதி மரணமடைந்தார்.