TN TET இலவச ஆன்லைன் தேர்வு|பத்தாம் வகுப்பு தமிழ் இயல்-01-05

1
2347

ஆசிரியர் தகுதி தேர்வு முதல்தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுக்கான ஆன்லைன் தேர்வுகள். இத்தேர்வில் |பத்தாம் வகுப்பு தமிழ் இயல்-01-05

கீழே கொடுக்கப்பட்டுள்ள 50 கேள்விகளுக்கும் சரியான விடைகளை தேர்ந்தெடுத்துவிட்டு இறுதியில் SUBMIT செய்யவும். அதன் பின்பு உங்கள் மதிப்பெண் மற்றும் சரியான விடைகள் திரையில் தோன்றும்.

கீழே உள்ள TEST LINK பட்டனை அழுத்தி தேர்வில் பங்கு பெறுங்கள்.

TN TET இலவச ஆன்லைன் தேர்வு|பத்தாம் வகுப்பு தமிழ் இயல்-01-05

Welcome to your சாந்தி ஐ.ஏ.எஸ். அகாடமி வழங்கும் தமிழ் தேர்வு [பத்தாம் வகுப்பு இயல் 1 முதல் 5 வரை ]

1) சொற்களை அளவாகப் பயன்படுத்தி உரைநடையை அழகு செய்ய மு.வ எந்த கட்டுரை தொகுப்பை எழுதினார்?

2) சிவனடியார்க்கு விருந்தளிக்க மாறநாயனார் நெல்லை அரித்து வந்து பின் சமைத்து விருந்து படைத்த செய்தி இடம் பெறும் நூல்.

3) “ஸ்டீபன்ஹாக்கின்” எழுதிய காலத்தின் சுருக்கமான வரலாறு எந்த ஆண்டு வெளியானது? எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது?

4) “மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” பாடலடி இடம்பெறும் நூல்

5) தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது?

6) கூற்றுகளை ஆராய்க:- 1.செய்குதம்பிபாவலரின் காலம் – 1874 – 1950., 2.செய்குதம்பி பாவலர் பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்., 3.செய்குதம்பி பாவலர் சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்., 4.செய்குதம்பி பாவலர் 1907 மார்ச் 10 ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் ஆயிரம் செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்டுபெற்றார்.

7) “நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு கோல வெறிபடைத்தோம்” என்று பாடியவர்.

8) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உடன் தொடர்பில்லாத கூற்று எது?

9) “புத்தகத்தின் மத்தியிலேமயிலிறகை வைத்தவர்கள் முகப்புத்தகை திறந்தவுடன் உணர்வுகளை வைப்பதேனோ” என்று பாடிய “டெபோரா பர்னாந்து” என்பவர் ஒரு

10) கூற்றுகளில் தவறானது?

11) கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர்

12) இருத்தலும் இருத்தல் நிமித்தமும் எந்நிலத்திற்குரிய உரிப்பொருள்

13) கூற்றுகளை ஆராய்க : 1. வடஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2000 ஆம் ஆண்டில் தொடங்கியது. 2.கொரியாலிஸ் விளைவை பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுநர் காஸ்பார்ட் குஸ்டாங் கொரியாலிஸ் கண்டறிந்த ஆண்டு – 1835, 3.இடம்புரிப்புயல்கள் வங்க கடல், அமெரிக்கா, ஜப்பான், சீனாவைத்தாக்கும் புயல்கள் 4.வலம்புரிப் புயல்கள், ஆஸ்திரேலியாவின் கிழக்குகரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள்

14) “நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக களிஇயல் யானைக் கரிகால் வளவ” என்று கரிகால் பெருவளத்தானை புகழ்ந்து பாடியவர்?

15) கூற்றுகளை ஆராய்க: 1.தொழிற்பெயர் காலம் காட்டும், 2.தொழிற்பெயர் படர்க்கைக்கே உரியது, 3.வினை, பெயர்த் தன்மையாகி தொழிலையே உணர்த்தி நிற்பது தொழிற்பெயர், 4.தொழிற் பெயர் காலம் காட்டாது.

16) ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துக்கள் எண்ணிக்கை

17) பொருத்தமற்ற இணை எது?

18) பொருத்தமற்ற இணை எது? 1.ஒத்த – பரிபாடல், 2.ஓங்கு – பதிற்றுப்பத்து, 3.நல்ல – நற்றினை, 4. நல் – குறுந்தொகை

19) “கத்துகடல் சூழ்நானக் காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போது அரசி வரும்” என்று பாடியவர்

20) “பாடும் இமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி

21) ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்

22) அறிவை விட மிக முக்கியமானது கற்பனைத் திறன் என்றவர்

23) “காசினியின் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று கூறியவர்

24) தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழிபெயர்ப்பில் முதல் நான்கு இடங்களில் உள்ள மொழிகளின் சரியான வரிசை?

25) “அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்” யார் கூற்று

26) “மேரி மெக்லியோட் பெத்யூன்” வாழ்க்கையை “உனக்கு படிக்கத் தெரியாது என்ற தலைப்பில் நூலாக படைத்தவர்

27) கீழ்க்கண்ட பாடல் வரிகளில் அகநானூற்றிற்கு பொருந்தாதது?

28) சரியற்ற இலக்கணகுறிப்பைத் தேர்க

29) சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை – எத்தனையாவது திருக்குறள்?

30) ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்தும்தொடர்

31) “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று சங்ககாலத்திலேயே தமிழில் மொழி பெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் செப்பேடு?

32) கீழ்க்கண்டவற்றுள் பண்புத்தொகைக்கு பொருந்தாதது

33) “சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும் விருந்து வைக்கும், ஆலமர நிழலில் அமர்வேன்,ஆல்; என் விழுதைப் பார்” – இது யாருடைய கூற்று

34) கீழ்க்கண்டவற்றுள் ஒற்றளபெடையில் சேராத எழுத்து எது?

35) “ஒப்புடன் முகம் மலர்ந்தே, உபசரித்து உண்மை பேசி உப்பிலா கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம்” எனக்கூறும் நூல்

36) ராகுல் சாங் கிருத்யாயனின் “வால்காவிலிருந்து கங்கை வரை” நூலின் மொழிபெயர்ப்பு இணைகளில் பொருத்தமற்றது எது? 1. யூமாவாசுகி – 2018., 2) டாக்டர் என்ஶ்ரீதர் – 2016., 3. மீனாட்சி – 2016., 4) கணமுத்தையா – 1949

37) “ஆய்வேடு” என்பதன் கலைச்சொல்

38) சரியான வரிசையைத் தேர்

39) “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும் என்று எழுதியவர்.

40) கூற்றுகளில் தவறானது எது?

41) கூற்றுகளை ஆராய்க: 1.பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை, மாணிக்கம். , 2.பெருஞ்சித்திரனார் தென்தொழி, தமிழ்ச்சிட்டுஇதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்., 3. பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது., 4.பெருந்சித்திரனாரின் நூல்கள் எண்சுவை என்பது, மகபுருவஞ்சி உலகியல் ஆயிரம் போன்றவை

42) “வன்டொடு புக்க மணவாய் தென்றல்” என்று தென்றலாகிய காற்றை நயம்பர உரைத்தவர்

43) முல்லைக்கு பொருந்தாதது எது? 1.காடும் காடுசார்ந்த இடமும்., 2. மரம் – கொன்றை, காயா, குருநீதம்., 3. பெரும்பொழுது – கார்காலம் சித்திரை வைகாசி., 4. நீர் – அருவி நீர், சுனைநீர்

44) “பூக்களிலிருந்து திருடும் நறுமணத்தை, வீணையிலிருந்து கவர்ந்த இசையை எங்கே கொண்டு போய் ஒளித்து வைக்கிறாய்” என்று காற்றினை கேள்வி எழுப்பியவர்?

45) “பண் என்னாம் பாடற்கியைபின்றேல்” என்ற திருக்குறளில் பயின்று வரும் அணி

46) தமிழ்மறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க்கணியை TMC data நிறுவனம் எந்த ஆண்டு வெளியிட்டது?

47) பெப்பர் எனப்படும் இயந்திர மனிதனை உருவாக்கிய நாடு?

48) கீழ்கண்டவற்றுள் பொருந்தாதது?

49) பொருத்தமற்றது எது.

100) கூற்றுகளை ஆராய்க:- 1. “நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்” என்கிறது சிறுபாணாற்றுப்படை., 2.“விருந்தினரும் வறியவரும் நெருங்கியுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர்போல” – கலிங்கத்துப்பரணி., 3. “கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாக” குறிப்பிட்டவர் கம்பர்., 4. அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்போர் நல்லோர், அத்தகையோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்று குறிப்பிட்டவர் கடலுள்மாய்ந்த இளம் பெருவழுதி