TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-01(6TH HISTORY)

0
6345

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-01(6TH HISTORY)

TET PAPER-02 தேர்வர்கள் பயன்பெறும் விதத்தில் நமது தமிழ் மடல் இணையதளம் இலவச ஆன்லைன் தேர்வு தொகுப்பினை வழங்குகிறது.68 தேர்வுகள் கொண்ட இத்தேர்வு தொகுப்பானது ஜனவரி 5ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் வரை நடைபெறும். முழு மாதிரி தேர்வில் 150 வினாக்களும் மற்ற தேர்வுகளில் 50 வினாக்களும் கேட்கப்பட்டிருக்கும் .  தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும் . காலை 7 மணி மற்றும் மாலை 6 மணிக்கு தேர்விற்கான லிங்க் வழங்கப்படும்.தேர்விற்கான  லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும்.

இந்த தேர்வு தொகுப்பில் பங்கு பெற்று பயன் பெறுங்கள்.உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

TEST BATCH SCHEDULECLICK HERE

JOIN OUR WHATSAPP GROUPCLICK HERE

JOIN OUR TELEGRAM-CLICK HERE

TET PAPER-02 FREE TEST BATCH SOCIAL SCIENCE TEST-01(6TH HISTORY)

Welcome to your 6th std HISTORY

1. கூற்று : பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர் காரணம் : குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தும்.

2. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழாய்வுகள் மூலமாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?

3. தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி

4. பழைய கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.

5. கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே

6. பரிணாமத்தின் வழிமுறை _____

7. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.

8. அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?

9. இந்தியத் தொல்லியல் துறையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்.

10. கீழ்க்காணும் கூற்றுக்களில் எது சரியானது?

11. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க. 1. சிந்து வெளி தெருக்கள் சட்டக வடிவமைப்பைக் கொண்டிருந்தன 2. அங்கு அரண்மனைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. 3. அங்கு வழிபாட்டுத்தலங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை

12. நாகரிகம் என்ற இலத்தீன் மொழி வார்த்தையான சிவிஸ்’ என்பதன் பொருள்

13. இந்தியத் தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு ______

14. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வியல் துறை தொல்பொருள் ஆராய்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பிற்கும் பொறுப்பானது.

15. கீழ்க்காணும் கூற்றை ஆராய்க. 1. நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றில் சீரான – தன்மை. 2. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு. 3. தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது. மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது / எவை சரியானவை?

16. உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்

17. கூற்று : பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் நடைபெற்றது. காரணம் : வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.

18. அ) ‘திருநாவுக்கரசர், “கல்வியில் கரையில்” எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம். ஆ) இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம். இ) “நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம்” என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.

19. சரியான இணையைக் கண்டறிக.

20. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது

21. சப்த சிந்து என்பது ………. ஆறுகள் ஓடும் நிலப்பகுதி

22. தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் ………… பிரிவுகள் காணப்பட்டன.

23. நம் நாட்டின் தேசியக் குறிக்காேள் “வாய்மையே வெல்லும்” _____________ லிருந்து எடுக்கப்பட்டது.

24. கூற்று : வேத காலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் ற்றும் பயன்பாட்டு பாெருள் சான்றுகள் கிடைத்துள்ளன காரணம் : நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.

25. கூற்று 1 : தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிகப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார் கூற்று 2 : இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.

26. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?

27. கீழக்குயில் குடி கிராமத்தில் உள்ள சமணர் மலை ………… நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

28. கூற்று : கி.மு. ஆறாம் நூற்றாண்டு இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் ஒரு முக்கியமான கால கட்டம் ஆகும். காரணம் : சமயத்தின் பெயரால் செயப்படுத்தப்பட்ட சுரண்டல் நடைமுறைகள் புதிய நம்பிக்கைகள் தோன்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.

29. சரியான விடையைக் கண்டறியவும். வர்த்தமானர் 1. ஒரு சத்திரிய இளவரசர் 2. பன்னிரண்டரை ஆண்டு கால தவத்திலிருந்தார் 3. இவர் தான் உண்மையிலேயே சமணத்தை உருவாக்கியவர். 4. முதல் தீர்த்தங்கரர் ஆவார்.

30. சித்தார்த்தா தனது …………. வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார்.

31. கூற்று : ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும். காரணம் : அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.

32. கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் …………. மகாஜனபதங்கள் இருந்தன.

33. தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு ………. நுழைவு வாயில்கள் இருந்தன.

34. கூற்று : மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது. காரணம் : பிம்பிசாரர் படையெடுப்பு மற்றும் திருமண உறவு ஆகியவற்றின் மூலம் அரசை விரிவுபடுத்தினார்.

35. சந்திரகுப்த மெளரியர் அரியணையைத் துறந்து _________என்னும் சமணத் துறவியோடு சரவணபெகோலாவுக்குச் சென்றார்.

36. கூற்று 1 : ஒட்டு மொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மெளரியர் ஆவார். கூற்று 2 : மெளரியரின் நிர்வாகம் பற்றிய செய்திககள அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.

37. இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிடப்படுவது

38. கூற்று : களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்ல. காரணம் : இலக்கியச் சான்றுகள், புதிய எழுத்துமுறை, வணிகம் வர்த்தகம் செழிப்பு பற்றி தெரிகிறது.

39. பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது

40. சி-யூ-கி எழுதிய சீன பௌத்த துறவியும் பயணியுமானவர்

41. கூற்று : பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற பகுதிகளை ஆக்கிரமித்தனர். காரணம்:மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.

42. நாக்காள் பதோம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லால் ஆன முத்திரை தாய்லாந்தில் – உள்ளது

43. கூற்று : இந்தோ-கிரேக்கர்களின், இந்தோ-பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன. காரணம் : குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவுகொண்டு இரண்டறக் கலந்தனர்

44. கூற்று : மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர் கூற்று II : கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்

45. ஹர்ஷர் கலந்து கொண்ட கும்பமேளா விழா நடைபெற்ற இடம்

46. கூற்று : ஹரப்பா வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார். காரணம் : முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்

47. கூற்று : குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசரான முதலாம் நரசிம்ம குப்தர் மிகிரகுலருக்கு கப்பம் கட்டி வந்தார். காரணம் : மிகிர குப்தர் பௌத்தத்தைப் பகைமையோடு பார்த்ததால் மன வேதனை அடைந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினார்.

48. கூற்று I : முதல் சமணத் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் வாழ்க்கையை ஆதிபுராணம் சித்தரிக்கிறது. கூற்று II : ராஷ்டிரகூடர்கள் சமணத்தைப் பின்பற்றினார்கள்.

49. கூற்று 1 : பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது. கூற்று 2 : காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

50. தவறான இணையைக் கண்டறியவும்