புதிய மின் கட்டணத்தை கணக்கிட வேண்டுமா? |TNEB BILL CALCULATOR

2
2015

தமிழக அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தமிழக அரசின் மின்வாரியத் துறையின் TANGEDCO இணையதளத்தில் Bill Calculator என்ற ஒரு வசதி இருக்கும். நமது பயன்பாடு எத்தனை யூனிட் என்பதை அதில் ஈடு செய்தால் அதற்கான கட்டணத் தொகை எவ்வளவு வரும் என்று துல்லியமாக காண்பித்துவிடும்.

மேலே காட்டப்பட்டது போன்ற பக்கத்தில் Select the tariff என்பதில் Domestic (வீட்டு பயன்பாட்டிற்கு) என்பதை தெரிவு செய்து கொண்டு, மாதம் ஒருமுறை கட்டணம் என்றால் Monthly என்பதையும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் கட்டிக் கொண்டிருந்தீர்கள் என்றால் Bi-Monthly என்பதையும் தெரிவு செய்யவும்.

பின்பு Consumed Units என்பதில் எத்தனை யூனிட் என்று உள்ளீடு செய்து Calculate என்னும் பட்டணை கிளிக் செய்யவும். அப்போது உங்களுக்கான கட்டணத் தொகை எவ்வளவு வரும் என்பது காண்பிக்கப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள சிவப்பு நிற பட்டனை அழுத்தி எவ்வளவு யூனிட்டு இருக்கு எவ்வளவு கட்டணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போது மின்கட்டணத்தை புதிய Tariff ஆக மாற்றியுள்ளதால் இனி அடுத்து வரும் கட்டணம் சிறிது அதிகம் வரும் என்பதாலும் உங்கள் பட்ஜெட்டை நீங்கள் முடிவு செய்வதற்கு இந்த Bill Calculator உதவி செய்யும்.

உதாரணமாக முன்பெல்லாம் 470 யூனிட் பயன்பாட்டிற்கு ரூபாய் 1040 கட்டணமாக வரும்.

ஆனால் இனி 470 யூனிட்டுக்கு ரூபாய் 1545 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

உங்கள் பட்ஜெட் ரூபாய் 1000 என வைத்துக் கொண்டால் உங்கள் பயன்பாடு 370 யூனிட்டை மிகாமல் பார்த்துக் கொள்ளவும். 370 யூனிட்டிற்கு ரூபாய் 990 கட்டணமாக பெறப்படும்.

உங்கள் வீட்டில் என்று அதிகாரி கணக்கெடுக்க வருகிறாரோ அன்று உங்கள் மீட்டரில் உள்ள எண்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அன்றிலிருந்து தினமும் எத்தனை யூனிட் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை தினமும் மீட்டரை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மின் கட்டணத்தை குறைக்க ஒரு சில டிப்ஸ்கள்

1. தேவையான நேரம் தவிர மற்ற நேரங்களில் மின்சார உபகரணங்களை அணைத்து வையுங்கள். அதாவது உங்கள் அறையில் மின்விசிறி ஓடிக்கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் இரண்டு நிமிடங்களுக்காக சற்றே நீங்கள் வெளியேறினால் கூட இரண்டு நிமிடம் தானே ஓடிவிட்டு போகட்டும் என்று விட்டு விடாதீர்கள் இரண்டு நிமிடமானாலும் ஒரு நிமிடமானாலும் மின்விசிறியை அணைத்து விட்டு செல்லுங்கள்.

2. புத்தகம் படிப்பது எழுதுவது போன்ற நேரங்களில் மட்டும் அதிக வெளிச்சம் தரக்கூடிய டியூப் லைட்டுகளை பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் எல்இடி விளக்குகளை மட்டும் பயன்படுத்துங்கள் குறிப்பாக பழைய மாடல் குண்டு பல்புகள் இருந்தால் பயன்பாட்டை அடியோடு நிறுத்துங்கள்.

3. நீங்கள் AC பயன்படுத்துகிறவராக இருந்தால் முடிந்த அளவு அதன் பயன்பாட்டை குறைக்கப் பாருங்கள். தினமும் குடும்பத்தோடு மொட்டை மாடியில் நேரம் செலவிடுங்கள். அந்த நேரத்தில் உங்களுடைய விசிறி மற்றும் AC பயன்பாட்டை குறைக்கலாம்.

4. நீர் மோட்டாரை பயன்படுத்தும் பொழுது சில நேரங்களில் நீர் தொட்டி நிறைந்து போவது கூட தெரியாமல் தண்ணீரையும் மின்சாரத்தையும் வீணடிப்போர் உண்டு. இனி கொஞ்சம் அதில் கவனமாக இருங்கள்.

5. அயர்ன் பாக்ஸ் , மிக்சி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர் போன்ற வாட்ஸ் அதிகமான மின் உபகரணங்களை அளவோடும் சிக்கனமாகவும் பயன்படுத்துங்கள்.