கள்ளகுறிச்சி மாணவியின் புதிய சிசிடிவி ஆதாரம் இணையத்தில் வைரல்!

0
602

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி கடந்த13-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கைதான தாளாளர் ரவிகுமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர்சிவசங்கர், வேதியல் ஆசிரியர் ஹரிப்ரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோர் சேலம் மத்தியசிறைச்சாலையில் உள்ளனர்.

அதே போல் அவர்களிடம் சிபிஐ போலீசார் சில தினங்களுக்கு முன் சுமார் 12 மணிநேரம் கிடுக்குப்பிடிவிசாரணை நடத்தினர். இதில் பல்வேறு உண்மைகள் வெளியவந்துள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சூழலில் மாணவி மரணம் குறித்து சிசிடிவி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மாணவி இறந்து கிடப்பது போன்றும் நான்கு பேர் அவரை தூக்கி செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இத்தகைய வீடியோ ஆதாரமானது மாணவியின் மரண விவகாரத்தில்  முக்கியமாக பார்க்கப்படுகிறது.