ஆதார் பிளாஸ்டிக் கார்டு வாங்குவது எப்படி? | How to get Aadhaar PVC Card

0
817

நாம் அனைவருமே பெரும்பாலும் ஒரே வகையான ஆதார் அட்டையை தான் பயன்படுத்தி வருகிறோம். அரசு தபாலில் நமக்கு அனுப்பிய அந்த பெரிய ஆதார் அட்டையை பத்திரப்படுத்தி பயன்படுத்துவோரும் உண்டு, அதை கத்திரிக்கோல் கொண்டு கார்டு வடிவில் நறுக்கி பயன்படுத்துவோரும் உண்டு. சிலர் அதையே கலர் ஜெராக்ஸ் எடுத்து லேமினேட் செய்தும் , பிளாஸ்டிக் கார்டு போன்று பிரிண்ட் செய்தும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அரசு தரப்பில் இருந்து நமக்கு தரமான பிளாஸ்டிக் கார்டு(PVC CARD) வழங்கும் வசதியும் ஆதார் இணையதளத்தில் உள்ளது என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இந்த பிளாஸ்டிக் கார்டு நமது ATM CARD போன்று தரமானதாக இருப்பதால் சாதாரண அட்டை போன்று கசங்குவதோ கிழிவதோ இல்லை.

இது போன்ற கலர் அட்டையில் உங்கள் புகைப்படம் மற்றும் QR CODE , ஹாலோகிராம் போன்ற அனைத்து விபரங்களும் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். இதற்கான கட்டணம் ரூபாய் 50 மட்டுமே. நம் ஊரில் சில கடைகளில் நமது ஆதார் கார்டை ஸ்கேன் செய்து பிளாஸ்டிக் கார்டு போல ஒரு வெள்ளை ரெடிமேட் கார்டில் பிரிண்ட் செய்து கொடுத்துவிட்டு ரூபாய் 100 க்கு மேல் வசூலிப்பது உண்டு. அதுபோல செய்யபடும் அச்சு தரமாக இருப்பதில்லை. கொஞ்ச நாளில் அதில் உள்ள பிரிண்ட் அழிய ஆரம்பித்துவிடும்.

ஆனால் வெறும் ரூபாய் 50-ல் தரமான PVC AADHAAR CARD -ஐ நம் வீட்டிற்கே தபாலில் அரசே அனுப்பி வைக்கிறது என்னும் போது அனைவரும் இதை பயன்படுத்தி கொள்வது நமக்கு இலாபகரமானதே. இதனை எளிதாக பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை இப்போது காணலாம்.

1.முதலில் ஆதார் இணையத்தின் கீழ்கண்ட பக்கத்திற்கு செல்லுங்கள்.

மேலே இருக்கும் பட்டணை கிளிக் செய்த பின்பு கீழ் காணும் பக்கம் திறக்கும்.

மேற்கண்ட பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்து , captcha Code-ஐ சரியாக பதிவு செய்து உங்கள் மொபைல் நம்பர் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருந்தாலும், My mobile number is not registered என்பதில் தவறாமல் கிளிக் செய்யவும். அதன் பின்பு Send OTP என்பதில் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் மொபைலுக்கு வரும் OTP-ஐ உள்ளிடவும்.

OTP-ஐ உள்ளீடு செய்த பின்பு Terms and Condition என்பதில் கிளிக் செய்து submit செய்யவும்.

Submit செய்த பின் காண்பிக்கும் warning மெசேஜில் Okay என கிளிக் செய்யவும்.

அதன் பின்பு கீழ்கண்டவாறு I here by…. என்பதில் டிக் செய்து, Make Payment என்பதில் கிளிக் செய்யவும்.

Make Payment என்பதை கிளிக் செய்தவுடன் பல Payment Option திரையில் தோன்றும். அதில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, UPI போன்ற ஏதாவது ஒரு முறை மூலம் ரூபாய் 50 செலுத்தி உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

இப்போது பெரும்பாலும் அனைவருமே google pay பயன்படுத்துவதாலும் UPI Payment எளிது என்பதால் கூகிள் பே மூலம் எப்படி கட்டணம் செலுத்தலாம் என்பதன் மாதிரி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட படத்தில் UPI என்பதை தேர்ந்தெடுத்தால் அதில் கீழ்காணும் google pay, phone pe, paytm, போன்ற ஏதேனும் ஒரு UPI Option கொண்டு கட்டணம் செலுத்தலாம்.

எடுத்துக்காட்டாக google pay என்பதை கிளிக் செய்து நமது UPI id -ஐ உள்ளீடு செய்து verify செய்தால் கீழ்கண்டவாறு உங்கள் google pay அப்ளிகேஷனை Open செய்ய சொல்லி 5 நிமிடம் count down நேரம் ஓட ஆரம்பிக்கும்.

இப்போது Browser-ஐ Close செய்துவிடாமலும் Back பட்டணை அழுத்தி விடாமலும் Home பட்டணை அழுத்தி வெளியேறி நம் மொபைலில் இருக்கும் கூகிள் பே அப்ளிகேஷனை திறந்தால் google pay App-ல் 50 ரூபாய்கான அனுமதி கோரப்படும்.

இப்போது உங்கள் Google pay அப்ளிகேஷனில் 50 ரூபாய்க்கான அனுமதி கேட்க்கும் பொழுது அதை செலுத்தி விட்டு மீண்டும் Browser-ஐ திறந்தால் உங்கள் பரிவர்த்தனை அங்கிகரிக்கப்பட்டு கீழ் காணும் ஸ்கிரீன் தோன்றும்.

மேற்கண்ட பக்கத்தில் Transaction Status – Success என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அதன் பின்பு captcha code -ஐ enter செய்து Download Acknowledgement என்பதில் கிளிக் செய்யவும்.

மேற்கண்டவாறு நீங்கள் பணம் செலுத்தியதற்கான Acknowledgement pdf காண்பிக்கப்படும். இதை ஒரு ஆதாரத்திற்காக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் பணம் செலுத்திய 5 நாளில் உங்கள் ஆதார் அட்டை (PVC CARD) பிரிண்ட் செய்யப்பட்டு இந்தியா போஸ்ட் மூலமாக விரைவு தபாலில் நம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.