எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி விடுமுறை|04-08-2022

0
676
school holiday

நீலகிரி மாவட்டத்தில், மழை பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்ள உள்ளூர் தீயணைப்பு வீரர்களுடன், தேசியபேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில்இருந்து பொதுமக்களை காப்பாற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ள நிலையில், இதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதனிடையே, தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும்இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் முரளீதரன் அறிவித்துள்ளார். கொடைக்கானல், வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

கொடைக்கானலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கொடைக்கானல் மற்றும் சிறுமலையில்  உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைஅளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை; கொடைக்கானல், சிறுமலை பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை