நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருப்பதற்க்கான சிறந்த 8 வழிகள்…

0
575

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்…
🙏🙏🙏

8 ways to be happy all the time

நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருப்பதற்க்கான சிறந்த 8 வழிகள்…

உங்களை சுற்றிலும் சில விசயங்கள் உங்களுடைய கட்டுப்பட்டுக்குள் நடைபெறுகின்றன. ஆனால் பல விசயங்கள் உங்களுடைய கட்டுப்பாட்டை மீறி நடக்கும் செயல்.

உதாரணம்.

நமக்கு மிகவும் பிடித்தவர்களுடைய பிரிவு அல்லது இறப்பு.

நமக்கு பிடித்த நடிகருடைய படம் தோல்வியை சந்திப்பது.

இயற்கை பேரிடர்களின் மூலம் ஏற்படும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம்

இன்னும் இது போன்ற பல விசயங்கள்.

இவையனைத்தும் நம்மை மிறி நடக்கும் செயல் இவைகளை எண்ணி சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் கவலை கொள்ள மட்டுமே நமமால் முடியுமே தவிர இவற்றை எண்ணி முழு நேரமும் கவலை கொள்வதால் என்ன பயனும் இல்லை. இவை எதையுமே நம்மால் தடுக்க முடியாது. ஆனால் இதில் நமது கட்டப்பாட்டுக்குள் இருக்கக்கூடிய ஒரு விசயம் இவையனைத்தையும் நாம் எவ்வாறு எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொருத்து மனதினுடைய பாதிப்புகளை குறைத்து கொள்ளமுடியும். அதனால் நமது சந்தோசத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளமுடியும்.

எப்போதுமே உங்களை குறை குறிக்கொண்டே இருக்கும் நபர்களை
உடன் வைத்திருப்பதை தவிர்த்துவிடுங்கள். மேலும் இவர்கள் எப்போதும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவார்கள். மேலும் உங்கள் மீது அதிக அக்கறை உடையவர்களை போல காட்டிக்கொள்வார்கள். இது போன்ற நபர்களை கண்டறிந்து இவர்களுடன் பழகுவதை தவிர்த்து விடுங்கள்.

இவர்களை எவ்வாறு கண்டறிவது

இவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவிடும்போது அதிக கோபம் வரும்

மேலும் அதிக மன அழுத்தம் ஏற்படும்.

அட்வைஸ் செய்கிற மாதிரி உங்களை எப்போதும் தன்னுடைய கண்ட்ரோலில் வைத்துக் கொள்வார்கள் .

இவையனைத்தும் அவர்களுடைய நெகட்டிவ் குணங்கள். ஆகவே இது போன்ற நபர்களிடம் இருந்து சற்று விலகியிருப்பது நல்லது.

நம் அனைவர் இடத்திலும் நிறை மற்றும் குறை இரண்டுமே இருக்கும். இவை இரண்டிலும் நாம் எதை பற்றி அதிகநேரம் சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை கவனிக்கவேண்டும். நாம் எப்போதும் குறைகளை எண்ணிக்கொண்டே இருந்தால் உங்களுடைய சக்தி பெருமளவில் அதற்கே செலவாகிவிடும். மேலும் நாம் நமது குறைகளை பற்றி சிந்திப்பது என்பது மிகவும் எளிதான காரியமும் கூட. ஆகவே நம்மிடம் உள்ள நிறைகளில் கவனம் செலுத்தி மேலும் அதை வலிமையுடையதாக மாற்ற தேவையான செயல்களில் ஈடுபடும் போது நீங்கள் மேலும் வலிமையுடையவர்களாக மாறுவீர்கள். உங்களுடைய சந்தோசமும் அதிகரிக்கும்.

தலை சிறந்த பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் நமக்கு பிடித்த பொருட்களை வாங்குவதால் ஏற்படும் சந்தோசம் நீண்ட நாட்கள் நீடிக்குமா அல்லது உங்களுக்கு ஏற்பட்ட நல்ல அனுபவங்கள் மூலம் கிடைக்கும் சந்தோசம் அதிக நாள் நீடிக்குமா என்று. அதன் முடிவு நல்ல அனுபவங்கள் முலம் கிடைத்த சந்தோசமே நீண்ட நாட்கள் நீடிக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
பிடித்த பொருள். சிறிது காலத்தில் நமது அன்றாட வழக்கங்களோடு ஒன்றி விடுகிறது. ஆனால் அனுபவத்தின் மூலம் கிடைத்த சந்தோசம் , அதை நினைத்து பார்க்கும் போதெல்லாம் சந்தோசம் ஏற்படும்.

முக்கியமாக நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் தவறு. அதிலும் நமது குறைகளை மற்றவர்களுடைய நிறைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது.இவ்வாறு நினைக்கும் போது நீங்கள் எப்போதுமே உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட ஆரம்பிப்பீர்கள் இது மிகவும் தவறு. இதனால் உங்களுடைய தன்னம்பிக்கை குறையும். மேலும் எப்போதும் சோகமாகவே காணப்படுவீர்கள். மற்றவர்களை உங்களோடு ஒப்பிட்டு வருந்துவதினால் கவலை அதிகமாகுமே தவிர சந்தோசம் வாராது. இதைவிட நீங்கள் உங்கள் செயலையே நேற்றை விட இன்று எவ்வளவு சிறப்பாக செய்ய முடிந்தது என்று எண்ணும்போது சந்தோசம் அதிகரிக்கும்.

நம்மை சுற்றி எப்போதுமே அதிக எதிர்மறை எண்ணம் கொண்ட விசயங்களே அதிகம் வைத்திருக்கிறோம். வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் மற்றம் டீவி, நீயூஸ் பேப்பர் என எதில் பார்த்தாலும் எதிர்மறை எண்ணங்கள் கொண்ட செய்திகள் அதிகம் பகிரபடுகின்றன. நீங்கள் அதை பார்க்கும் போதோ அல்லது கேட்கும் போதோ உங்களுடைய மனதிலும் ஏமாற்றம், வெறுப்பு, கோபம் மற்றும் பகையுனர்வு ஆகிய உணர்வுகளே மேலோங்குகிறது. ஆகவே இது போன்ற எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தக்கூடிய விசயங்களை தவிர்ப்பதின் மூலம் நமது உணர்ச்சிகளை சரியாக கையாளமுடியும். நாமும் சந்தோசமாக இருக்கமுடியும்.

எவர் ஒருவர் உடலையும் மனதையும் எப்போதும் வலிமையாக வைத்திருக்கிறாரோ அவர்களுக்கு எப்போதுமே சந்தோசத்திற்கு குறைவிருக்காது. சந்தோசமான மனிதன் யாரெனில் உடலையும் , மனதையும் விழிப்பு நிலையில் வைத்து உணர்ச்சிகளை சரியாக கையாள்கிறாரோ அவரே சந்தோசமான மனிதன். இவர்களுக்கு நோய் வருவதற்க்கான வாய்ப்பு மிகவும் குறைவு. நோய் இல்லையெனில் சந்தோசத்திற்கு குறைவு இருக்காது.

பலர் நடந்த விசயங்களை எண்ணி வருந்திக்கொண்டு இருப்பார்கள். மற்றும் நடக்கவிருப்பதை எண்ணி பயந்து கொண்டு இருப்பார்கள். நாம் நிகழ்காலத்தில் சரியாக திட்டமிட்டு செயல்படுவதின் மூலம் எதிர்காலத்தை எண்ணி பயம் கொள்ள தேவையில்லை. நாம் நமது வாழ்க்கையை சந்தோசமாக வாழமுடியும்.

நன்றி…

வாழ்க வளமுடன்🙏