இன்றைய சிந்தனை-27-07-22

0
668

❤️🧡💛💚💙💜🖤🤍❤️🧡💛

இன்றைய சிந்தனை
(27.07.2022)

…………………………………………….

“மனமுதிர்ச்சிஅடைந்தவர்கள்மனநிலை….”

…………………………………………….

💥”தீதும் நன்றும் பிறர் தர வாரா ” என்பதை முழுமையாக அறிகிறான்.

💥உலகத்தை மாற்ற முடியாது ; தன்னை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்பதை அறிகிறான்.

💥”தன்வினை தன்னைச் சுடும் “என்பதை அறிகிறான் .

💥நேரம் யாருக்காகவும் நிற்காது என்பதை அறிகிறான்.

💥”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” என்பதை அறிகிறான்.

💥கண்ணியமான கட்டுப்பாடு நிறைந்த வாழ்வை அறிகிறான்.

💥வெட்டிப் பேச்சு கூட்டத்தை விட்டு விலக அறிகிறான்.

💥நேர்மையாக சம்பாதித்து நிம்மதியாக வாழ அறிகிறான்.

ஆம் நண்பர்களே!

பிள்ளைகளுக்கு பொருள் சேர்த்து வைத்து சோம்பேறி ஆக்காமல் ,கல்வியோடு நற்குணங்களையம் வளர்த்து சுயமாக நிற்க கற்றுத் தருகிறான் ‌.

தேவையானவர்களுக்கு தேவையான வற்றை கேட்காமலே கொடுக்கும் மனம் கொண்டிருப்பான்.

💗வாழ்க வளமுடன்💗
என்றும் நலமுடன் !!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

💥 வரலாற்றில் இன்று🌎

முக்கிய நிகழ்வுகள்

👉 2016ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தமிழகக் கவிஞர் ஞானக்கூத்தன் மறைந்தார்.

👉 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஏவுகணை நாயகன் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மறைந்தார்.

👉 1844ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி அணு எடைக்கான முதல் பட்டியலை வெளியிட்ட ஜான் டால்ட்டன் மறைந்தார்.

👉 1953ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நடந்த யுத்தம் முடிவுக்கு வந்தது.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

தேசிக விநாயகம் பிள்ளை

🏁 தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி கவிஞர்களுள் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார்.

🏁 இவர் தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1940ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை ‘கவிமணி’ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார்.

🏁 மலரும் மாலையும், ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், அழகம்மை ஆசிரிய விருத்தம், கதர் பிறந்த கதை, குழந்தைச் செல்வம் ஆகியவை இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

🏁 இணையற்ற தமிழ் கவிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954ஆம் ஆண்டு மறைந்தார்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

சோமசுந்தர பாரதியார்

✍ விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் 1879ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன்.

✍ இவர் ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். 1905ஆம் ஆண்டு முதல் 1933ஆம் ஆண்டு வரை இவர் வழக்கறிஞராக பணியாற்றினார்.

✍ தமிழ் இலக்கண இலக்கியங்கள்,அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது தமிழ் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டு தமிழ்ப்புலவர் மன்றம் ‘நாவலர் ‘ என்ற பட்டத்தை வழங்கியது.

✍ தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 1959ஆம் ஆண்டு மறைந்தார்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மௌனி

👉 1907ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தமிழக எழுத்தாளர் மௌனி பிறந்தார்.

✍ இவர் மணிக்கொடி இதழில் இருந்து கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியுள்ளார்.

✍ கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த மௌனி இசையிலும், மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் ஆவார்.

✍ 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள் எழுதிய இவர் 1985ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மறைந்தார்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹