TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS-03

0
376

பொதுத் தமிழ்
வினாக்கள்-03
1. *கண்டனென் கற்பினுக் கனியைக் கண்களால்* ~ இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ் பெயர்?
2. *சிங்கங்களே! எழுந்து வாருங்கள்;நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்* எனக் கூறியவர் யார்?
3. *சொல்லாதென இல்லை பொதுமையான திருக்குறளில்* ~ இவ்வடியை பாடியவர்?
4. *நாயனார்* என்னும் சிறப்புப் பெயர் கொண்டவர்?
5. *களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே* (புறநானூறு) ~ என்று பாடியவர்?
6. *அழுது அடியடைந்த அன்பர்* ___?
7. மறைமலையடிகள் தாம் நடத்தி வந்த *ஞானசாகரம்* என்னும் இதழைத் தூய தமிழில் எவ்வாறு பெயர் மாற்றம் செய்தார்?
8. *ஜல்லிக்கட்டு* என்னும் எருதாட்டத்தை வைத்து *வாடிவாசல்* என்னும் நாவலை எழுதியவர் யார்?
9. திருமணம் செல்வ கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவிற்கு மிகவும் தொண்டு செய்தார்?
10.”தமிழ்
உரைநடை யின் தந்தை” _?
11. “முத்தொள்ளாயிரம்” இவர்களைப் பற்றி புகழ்கிறது ?
12. பொருத்துக.
அ. சிக்கனம் 1 கவிஞர் தாரா பாரதி
ஆ. மனிதநேயம் 2 ஆலந்தூர் மோகனரங்கன்
இ. காடு 3 சுரதா
ஈ. வேலைகளல்ல வேள்விகளே 4 வாணிதாசன்
13. *மணிமேகலை வெண்பா* என்னும் நூலின் ஆசிரியர்?
14. *பர்மா வழி நடைபயணம்* (பயண நூல்) ~ ஆசிரியர்?
15. *ஆனந்த தேன்* என்னும் நூலின் ஆசிரியர்?

பொதுத் தமிழ்
விடைகள்…

1.சொல்லின் செல்வன்
2. விவேகானந்தர்
3. பாரதிதாசன்
4. திருவள்ளுவர்
5. பொன்முடியார்
6.மாணிக்கவாசகர்
7. அறிவுக் கடல்
8. சி சு செல்லப்பா
9. உரைநடை
10. ஆறுமுக நாவலர்
(யாழ்ப்பாணம்)
11. மூவேந்தர்கள்
(சேர, சோழ, பாண்டியர்)
12. 3,2,4,1
13. பாரதிதாசன்
14.வெ சாமிநாத சர்மா
15. க சச்சிதானந்தன்